Nellai Top 10 Place: ஊட்டி, கொடைக்கானலை விட்டு தள்ளுங்க.. கோடை வெயிலில் நெல்லையில் பார்க்க வேண்டிய சூப்பரான 10 இடங்கள்

Published : Apr 29, 2026, 01:19 PM IST

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி, நெல்லையப்பர் கோவில் என்பதை தாண்டி, மனதை மயக்கும் பல சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, பாபநாசம், களக்காடு, அகஸ்தியர் அருவி குளுமையான 10 இடங்களை இந்த கட்டுரை பட்டியலிடுகிறது.

PREV
19
நெல்லையில் பார்க்க வேண்டிய 10 இடங்கள்

திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது தாமிரபரணி ஆறும், நெல்லையப்பர் கோவிலும் இருட்டுக்கடை அல்வாவும் தான். அதுமட்டுமல்ல குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு சிறப்பு பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் மனதை மயக்கும் முக்கிய சுற்றுலா தளங்கள். இந்நிலையில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குளு குளுவென இருக்க திருநெல்வேலியில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

29
பாபநாசம் அணை

திருநெல்வேலி மாவட்டத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று பாபநாசம் அணை. இயற்கை எழில் கொஞ்சும் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை, தென் தமிழகத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உயிர்நாடியாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் 108 சிவத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பழமையான கோவில், அணையின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. கோடை வெயிலில் குடும்பத்துடன் சென்று குளிக்க ஏற்ற இடம் பாபநாசம். இங்குள்ள ஆற்றில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

39
களக்காடு தலையணை

நெல்லையில் நீங்கள் தேடும் அந்த 'குளு குளு' அனுபவத்திற்கு மிகச்சிறந்த இடம் களக்காடு தலையணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஒரு இயற்கை நீச்சல் குளம் போன்றது. மலை உச்சியிலிருந்து ஓடி வரும் 'பச்சையாறு' சமவெளிக்கு வரும் இடத்தில், ஒரு தடுப்பணை போலக் கட்டப்பட்டுள்ளது. இது ஆற்றின் 'தலைப்பகுதி' போன்ற அமைப்பில் உள்ளதால் இதற்கு தலையணை என்று பெயர் வந்தது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கிறார்கள்.

49
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் (KMTR), தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இது "யுனெஸ்கோ" (UNESCO) அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி மற்றும் பல்வேறு வகையான குரங்குகள், மான்களும், அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் மற்றும் அடர்ந்த பசுமை மாறா காடுகள் உள்ளன. தாமிரபரணி, மணிமுத்தாறு, பச்சையாறு உட்பட 14 நதிகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. இதனால் இது நதிகளின் சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. காப்பகத்திற்குள் நுழைய அம்பாசமுத்திரம் அல்லது களக்காட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.

59
அகஸ்தியர் அருவி

நெல்லை மாவட்டத்தின் ஆன்மீக மற்றும் இயற்கை பொக்கிஷங்களில் ஒன்று அகஸ்தியர் அருவி. பாபநாசம் அணைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மற்ற அருவிகள் கோடையில் காய்ந்துவிடும், , ஆனால் அகஸ்தியர் அருவியில் எப்போதும் நீர் வரத்து இருக்கும். பெண்கள் மற்றும் ஆண்களுக்குத் தனித்தனியாக நீராடும் வசதிகள் இங்கு உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

69
மணிமுத்தாறு அருவி

நீங்கள் குடும்பத்துடன் சென்றாலும் நண்பர்களுடன் சென்றாலும் உங்கள் மனதுக்கு நிச்சயம் மணிமுத்தாறு அணை மகிழ்ச்சியளிக்கும். பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணை தாமிரபரணி ஆற்றின் முதன்மையான நீர்நிலை ஆகும். மணிமுத்தாறு அணைக்கு அருகில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு நல்ல நீர்வரத்து இருக்கும். சுற்றியும் மலைகள் மற்றும் காடுகள் சூழ்ந்துள்ள இந்த அணை காணும் கண்களுக்கு விருந்தாக இருக்கும். மணிமுத்தாறு அணைக்கு அருகில் ஒரு பூங்காவும் உள்ளது.

79
திருக்குறுங்குடி நம்பியாறு

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மற்றுமொரு சொர்க்கம் திருக்குறுங்குடி நம்பியாறு. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகிய நம்பி கோவிலுக்குப் பின்னால் ஓடும் இந்த ஆறு, ஆன்மீகமும் இயற்கையும் சங்கமிக்கும் ஒரு இடமாகும். வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் குறிப்பிட்ட தூரம் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

89
மாஞ்சோலை

மாஞ்சோலை

நெல்லை மாவட்டத்தின் 'ஊட்டி'. கடல் மட்டத்திலிருந்து 1162 மீட்டர் உயரத்தில் உள்ள இங்கு பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இதமான குளிர் எப்போதும் இருக்கும்.

காரையார் அணை

பாபநாசம் மேல் அணைக்குச் சென்றால், அங்கு படகு சவாரி செய்து கொண்டே குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம். இங்குள்ள வாணதீர்த்தம் அருவி உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

99
குதிரைவெட்டி

குதிரைவெட்டி

மாஞ்சோலைக்கு மேலே அமைந்துள்ள இந்த இடம், இன்னும் அதிக குளிரைக் கொண்டது. இங்கிருந்து பார்த்தால் மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளின் முழு அழகையும் மேகங்களுக்கு நடுவே ரசிக்கலாம். இந்த இடங்களுக்குச் செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம்.

ஊத்து

மாஞ்சோலை மலைப்பாதையில் உள்ள மற்றொரு குளுமையான இடம். இங்கு விளையும் ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் அந்த இடத்தையே நறுமணத்துடனும் குளிர்ச்சியுடனும் வைத்திருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories