அடிதூள்.. ஜனவரி 2ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கு விடுமுறை.. என்ன காரணம்?

Published : Dec 19, 2025, 12:28 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திரு உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. இந்த விடுமுறை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும்.

PREV
15
பள்ளி மாணவர்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு

விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம் தான். எப்போது ஓய்வு கிடைக்கும் சந்தோஷமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என காத்திருப்பார்கள். இந்நிலையில் பொதுவிடுமுறையை தவிர்த்து சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், தலைவர்களின் நினைவு நாட்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுத்து வருகின்றனர். அந்த வகையில் உள்ளூர் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

25
ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு 2026ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

35
டிசம்பர் 10ம் தேதி பள்ளி வேலை நாள்

அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் செயல்படும்.

45
அரசு ஊழியர்கள்

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், ஜனவரி 2ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
ஜனவரியில் கொட்டிக்கிடக்கும் விடுமுறை

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கொட்டி கிடக்கின்றனர். அதாவது இந்த வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி அரசு விடுமுறை, ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை, ஜனவரி 15, 16, 17ம் தேதிகளில் பொங்கல் விடுமுறை, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா விடுமுறை வருகிறது. எனவே அடுத்தடுத்து விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களும் சந்தோஷத்தில் உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories