அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி

Published : Dec 06, 2025, 08:17 AM IST

Car Accident: ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஐயப்ப பக்தர்களின் சொகுசு காரும், கீழக்கரை திமுக நகரமன்ற தலைவரின் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

PREV
14

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த சொகுசு காரும் கீழக்கரையில் இருந்து ஏர்வாடி நோக்கி சென்ற திமுக நகரமன்ற தலைவரின் காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

24

மேலும் இந்த இரண்டு கார்களில் பயணித்த 7 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

34

இந்த விபத்து தொடர்பாக கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகத்தால் விபத்து நிகழ்ந்ததா அல்லது தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

44

இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் அதிகாலை விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories