சகாயத்துக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? இல்லைனா! தமிழக அரசுக்கு நீதிபதி எச்சரிக்கை!

Published : May 06, 2025, 07:36 AM IST

முன்னாள் ஆட்சியர் சகாயம் மதுரை கிரானைட் குவாரி ஊழல் வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததால் நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

PREV
14
சகாயத்துக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? இல்லைனா! தமிழக அரசுக்கு நீதிபதி எச்சரிக்கை!
கிரானைட் குவாரி ஊழல்

கடந்த 2014-ஆம் ஆண்டு மதுரையில் ஆட்சியராக இருந்த சகாயம், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி சட்ட ஆணையராக இருந்து கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை வெளிக்கொண்டிந்தார். 2020-ஆம் ஆண்டு சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார்

24
சட்ட விரோத கிரானைட் குவாரி வழக்கு

இந்நிலையில் சட்ட விரோத கிரானைட் குவாரி வழக்குகள் மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் நேரில் ஆஜராக ஏற்கெனவே அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பியும் ஆஜராகததை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்திருந்தார். 
 

34
சகாயத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

இதனிடையே சகாயத்துக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு 2014 முதல் 2023 வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதில் சகாயமும் ஒருவர். இருப்பினும் நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இல்லாமல் சாட்சியம் அளிப்பதற்கு வசதியாக சகாயத்துக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

44
தமிழக அரசுக்கு எச்சரிக்கை

இந்நிலையில் சட்டவிரோத கிரானைட் குவாரி வழக்கு நீதிபதி லோகேஸ்வரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் ஆட்சியர்  சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை? ஏன் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது? அவருக்கு மீண்டும் உரிய போலீஸ் பாதுகாப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்படுமா? அவ்வாறு இல்லாதபட்சத்தில் அவருக்கு மத்திய பாதுகாப்பு படை சார்பில் அவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும் எனக்கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories