Power Shutdown in Madurai:சீக்கிரமாக வேலை முடிச்சிடுங்க.. மதுரையில் இந்த பகுதிகளில் இன்று மின்தடை..!

First Published | Jun 19, 2023, 8:32 AM IST

மதுரையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடக்கு சித்திரை வீதி, பள்ளிவாசல் தெரு, நெல்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

 தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், மதுரையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

அதன்படி இன்று மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம்;- சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1 முதல் இரண்டாவது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ் சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகரிடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கயர் கன்னி வளாகம், ராஜேந்திரன் மெயின் ரோடு,பாரதியார் ரோடு முழுவதும், பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகுளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Tap to resize

அதேபோல் வடக்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேலப்பட்டமார் தெரு, வட காவனி மூல வீதி, மேற்கு சித்திரை வீதி, மேலாவணி மூல வீதி,மேல செட்டி, கீழ செட்டி, மறவர் சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, கீழ நாபாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியின் கிணற்றுச்சந்து, கீழ மார்ட் வீதி, மீனாட்சி கோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புது தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு பகதிகளிலும் திருமலை ராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளிவீதி, தெற்கு சித்திரை வீதி, தெற்கு காவல் கூட தெரு, மேல கோபுரம் வீதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!