மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். பின்னர் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து பகுதி வட்ட கழக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எந்தவொரு இயக்கத்திற்கும் உள்ள முக்கிய திறன் தேர்தலில் வெற்றி பெறுவது தான். அரசியல் இயக்கம் என்றால் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.