தமிழகத்தின் நீளமான பறக்கும் மேம்பாலம்.. சோதனை ஓட்டம் தொடங்கியது.. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.!

First Published | Apr 6, 2023, 12:51 PM IST

தமிழகத்தின் நீளமான 7.5 கி.மீ. தொலைவுக்கு கட்டி முடிக்கப்பட்ட மதுரை - நத்தம் பறக்கும் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இதனை வரும் 8ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். 

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் ஐஓசி அலுவலகம் அருகே இருந்து, நத்தம் வரை 35 கி.மீ.க்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2018ம் ஆண்டு தொடங்கியது.

இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம்  வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது. இரு ஆண்களில்  முடிக்க வேண்டிய பணி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது. 

Tap to resize

இந்த பறக்கும் பாலத்தில் அடியில் 150 அடிக்கு ஒன்று என பலமான அஸ்திவாரத்துடன் 268  தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்கள் இடைய பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் கான்கிரீட் கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மதுரையில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி மற்றும் சென்னை செல்வோருக்கு பயண நேரம் குறையும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில்,  வரும் 8ம் தேதி சென்னையில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக பறக்கும் பாலத்தை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு இன்று பாலத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்திலேயே மிக நீண்டமான பாலமாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!