Heavy rain
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு முதல் தென்தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் தொடங்கிய கனமழை இரவு வரை நீடித்ததால் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாக ஓடியது.
tamilnadu heavy Rain
மதுரையில் மையப் பகுதிகளான கோரிப்பாளையம், தெற்குவாசல், மாவட்ட நீதிமன்றம் தல்லாகுளம், கேகே நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் மாட்டுதாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையங்களையும் மழைநீர் சூழ்ந்தது.
Schools Leave
இதனிடையே மதுரை ISROவில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் இதே அளவில் மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், தேனி மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
Mk Stalin
இந்நிலையில் கனமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீர் வடிவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.