ரீல் லைப் மட்டும் இல்ல; ரியல் லைப்லயும் விவசாயம்னா ரொம்ப பிடிக்கும் - நடவு பணியில் சசிகுமார்

First Published | Aug 9, 2024, 4:27 PM IST

இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது நிலத்தில் நடவு பணிகளில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

விவசாயம் செய்யம் சசிகுமார்

தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணி பாடகர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் சசிகுமார். தொடக்கத்தில் சேது படத்தில் இயக்குநர் பாலாவுடன் உதவி இயக்குநராகவும், அதனைத் தொடர்ந்து மௌனம் பேசியதே, ராம் ஆகிய படங்களில் இயக்குநர் அமீருடன் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

இயுகு்கநா சசிகுமார்

பின்னர் சுப்பிரமணியபுரம் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வருகிறார். அதே போன்று நடிப்பிலும் கவனம் செலுத்தி தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். 

Tap to resize

நடவு பணியில் விவசாயிகள்

கடந்த மே மாதம் நடிகர் சசிக்குமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடித்துள்ள ஃப்ரீடம் ஆகஸ்ட் 14 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரியல் லைப்பிலும் மண் சார்ந்த

இதனிடையே மண்சார்ந்த, தங்கள் ஊர் சார்ந்த திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த சசிகுமார் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் எங்கள் வயலில் இன்று நடவு பணி செய்யப்படுவதாக அதில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Latest Videos

click me!