100 கி.மீ. வேகத்தில் சீறிய பாய்ந்த கார்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது மோதல்! 4 பேர் பலி!

Published : May 25, 2025, 08:15 AM IST

உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் சாலையை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

PREV
14
சாலையை கடக்க முயன்ற போது விபத்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அதி வேகத்தில் வந்த கார் 7 பேர் மீதும் மோதியதில் சினிமா பாணியில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று வயது குழந்தை உட்பட 3 பெண்கள் ரத்த வௌ்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

24
4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த ஒரு வயது குழந்தை கவியாழினி, ஜெயபாண்டி (44), கருப்பாயி (55) ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த குழந்தை உட்பட 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

34
கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து

இந்த கோர விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள்கோவிலுக்கு சென்றுவிட்டு பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். குஞ்சாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர்கள் அங்குள்ள விலக்கு பகுதியில் மதுரை-தேனி மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது அசுர வேகத்தில் வந்த இவர்கள் மீது மோதியுள்ளது. விபத்தில் ஒரு வயது குழந்தை பிரகலாதன், தாய் ஜோதிகா (25), இவரின் மாமியார் லட்சுமி (55) பாண்டிச்செல்வி (42) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

44
தப்பியோடிய கார் ஓட்டுநர்

விபத்தை ஏற்படுத்தியது பூச்சிப்பட்டியை சேர்ந்த ஆனந்த் என தெரியவந்தது. தப்பியோடிய கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories