Coimbatore: கோவையில் லுலு-வுக்குப் போட்டியாக களமிறங்கும் ஹைப்பர் மார்க்கெட்! எப்போது திறப்பு? என்னென்ன இருக்கு தெரியுமா?

Published : Jun 23, 2026, 02:08 PM IST

Lulu Mall Vs Nesto Hypermart: கோவையில் தனது புதிய கிளையைத் திறக்கிறது. லூலூ மாலின் வெற்றியைத் தொடர்ந்து, சிங்காநல்லூரில் அமையவுள்ள இந்த ஸ்டோர், டி மார்ட் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து கோவையின் ரீடைல் சந்தைப் போட்டியை மேலும் தீவிரமாக்க உள்ளது.

PREV
15
தமிழகத்தின் மான்செஸ்டர்

கோவை என்றாலே நம் நினைவுக்கு வருவது ஜவுளித் தொழிலும், பஞ்சு ஆலைகளும் தான். மிகச்சிறந்த ஜவுளி மற்றும் நெசவுத் தொழிலின் மையமாக விளங்குவதால், இது தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இது தவிர பம்புகள், மோட்டார்கள் மற்றும் கிரைண்டர் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நகரமாகத் திகழ்கிறது. மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய பெருநகரமாகவும் திகழ்கிறது.

25
லூலூ மாலுக்கு போட்டியாக

இந்நிலையில் வளைகுடா நாடுகளில் அசைக்க முடியாத முன்னணி ரீடைல் நிறுவனமாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நெஸ்டோ ஹைப்பர் மார்க்கெட் தற்போது தமிழ்நாட்டிலும் தனது வர்த்தகத்தை தொடங்கவுள்ளது. அதாவது நெஸ்டோ ஹைப்பர் மார்க்கெட் இந்தியாவின் 13-வது கிளையை கோவையில் திறக்க தயாராகி வருகிறது. ஏற்கனவே கேரளாவின் 7 முக்கிய நகரங்களில் 12 கிளைகளுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், தற்போது லூலூ மால் சென்ற அதே பாதையைப் பின்பற்றி தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது.

35
நெஸ்டோ ஹைப்பர் மார்க்கெட்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள செல்லாண்டி அம்மன் நகரில் அடுத்த மாதம் இந்த புதிய ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளது. இந்த மெகா ஸ்டோரில் காய்கறிகள், புதிய பழங்கள், மளிகைப் பொருட்கள், ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பேக்கரி மற்றும் சுவையான ஹாட் ஃபுட்ஸ் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கவுள்ளன.

45
ஷாப்பிங் கலாசாரம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெறும் தொழில் நகரமாக மட்டுமே பார்க்கப்பட்ட கோவை, இன்று மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக மாறியுள்ளது. அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் லூலூ ஹைப்பர் மார்க்கெட்டின் இமாலய வெற்றியே இதற்கு சான்று. கோவை மக்களின் வாங்கும் திறனும், நவீன ஷாப்பிங் கலாசாரமும் சர்வதேச நிறுவனங்களை இந்நகரத்தை நோக்கி வருகிறது.

55
லூலூ VS நெஸ்டோ VS டி மார்ட்

வளைகுடா நாடுகளில் லூலூ மற்றும் நெஸ்டோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் நீண்ட கால வர்த்தகப் போட்டியாளர்களாக இருந்து வருகின்றன. இப்போது அந்த நேரடிப் போட்டி கோவையிலும் அரங்கேறப் போகிறது. சிங்காநல்லூர் பகுதியில் ஏற்கனவே டி மார்ட் (D-Mart), ஸ்மார்ட் சூப்பர்ஸ்டோர் மற்றும் டென்னிஸ் ஹைப்பர் மார்க்கெட் போன்ற பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது நெஸ்டோவின் வருகையால் கோவையின் ரீடைல் சந்தையில் போட்டி மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories