Coimbatore Case: சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி புதரில் சடலமாக மீட்கப்பட்டார். சிசிடிவி காட்சிகள் மூலம் பக்கத்து வீட்டுக்காரர் கார்த்தி மற்றும் அவரது நண்பர் மோகன் கைது செய்யப்பட்டனர். கைதான இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததை அடுத்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கண்ணம்பாளையம் குளக்கரை அருகே தென்னந்தோப்பை ஒட்டி உள்ள புதரில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
24
குற்றவாளிகள் கைது
இந்த சம்பவத்தை சிறுமியின் உடல் மீட்கப்பட்டடு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தி (33) என்ற நபர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து பதுங்கியிருந்த கார்த்தியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கார்த்திக்கின் நண்பர் மோகன் (30) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
34
கை, கால் முறிவு
இதனிடையே போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்ததில் கார்த்திக்கின் கை, கால் முறிந்ததை அடுத்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தி, நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். மோகன் குமாரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே இந்த வழக்கில் கைதான இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஓராண்டுக்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது. தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.