அதிமுக தலைமையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் பாஜகவே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாகவும் அமித்ஷா சொல்வதைத் தான் எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும் என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கிண்டலடித்து வருகின்றன. இதனால் பொங்கியெழுந்த எடப்பாடி பழனிசாமி, ''ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம்'' என காட்டமாக பேசினார்.
விஜய், சீமானுக்கு எடப்பாடி அழைப்பு
இப்படியாக ஒருபக்கம் அதிமுக, பாஜக கூட்டணி ஊசலாடி வரும் நிலையில், திமுகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும். திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை எனவும் விளக்கம் அளித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜய்யின் தவெகவும் நிராகரித்துள்ளன.