தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்தது முதல் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. அதிமுக தலைமையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் பாஜகவே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாகவும் அமித்ஷா சொல்வதைத் தான் எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும் என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கிண்டலடித்து வருகின்றன.
24
பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி
மேலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி தான் இருக்கும் என்று சில பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். இந்த இரண்டுக்கும் சேர்த்து எடப்பாடி பழனிசாமி நேற்று விடையளித்து விட்டார். இது தொடர்பாக தொண்டர்கள், மக்கள் மத்தியில் பேசிய அவர், ''''நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
திமுகவை அகற்ற வேண்டும்
உங்களை போன்று வாரிசுகளுக்கு (திமுக) ஆட்சி வருவதற்காக கூட்டணி வைக்கவில்லை. மக்கள் விரும்பும் கூட்டணி அமைத்துள்ளோம். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். திமுகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அந்த வகையில் திமுகவின் ஊழல் அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என பாஜக கருதுகிறது. திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்காகத் தான் பாஜக எங்களுடன் இணைந்துள்ளது. இன்னும் சில கட்சிகள் வர இருக்கின்றன. சரியான நேரத்தில் திமுகவுக்கு மரண அடி கொடுப்போம்'' என்றார்.
34
அதிமுகவுக்கு ஓட்டுப்போட நாங்களும் முட்டாள்கள் இல்லை
எடப்பாடியின் இந்த பேச்சு நேரடியாக அமித்ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால் பாஜக தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி இல்லை என ஈபிஎஸ் தெரிவித்த நிலையில், அதிமுகவுக்கு ஓட்டுப்போட நாங்களும் முட்டாள்கள் இல்லை என பாஜக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மிக முக்கியமாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அதிமுகவை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். ''பாஜக இல்லாமல் அதிமுகவால் 75 தொகுதிகளில் கூட டெபாசிட் வாங்க முடியாது. இந்த வேளையில் ஆட்சியில் பங்கு கூட இல்லாமல் எடப்பாடியை முதல்வராக்கி அழகு பார்க்க சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் பாஜகவினர் உதவ மாட்டான்.
பாஜகவினர் ஒன்றும் இழிச்சவாயர்கள் இல்லை'' என்று கூறியுள்ளனர். மேலும் இந்த பேச்சுகள் தான் ஈபிஎஸ் தொடர்ந்து தோற்றுப் போக காரணம். ஏமாளிகளா? என்று ஈபிஎஸ் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சில பாஜகவினரும் தெரிவித்தனர்.