'அண்ணன்' எடப்பாடி சொன்னால் கேட்போம்! ஆனால்??? ட்விஸ்ட் வைத்து பேசிய நயினார்! என்ன விஷயம்?

Published : Jul 19, 2025, 09:19 PM IST

தேசிய ஜனநாயாக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா கூறியதை கேட்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

PREV
14
Nainar Nagendran spoke about the BJP-AIADMK National Democratic Alliance

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மக்களை சந்தித்து ஆதரவை திரட்டத் தொடங்கி விட்டன. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளை கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதே வேளையில் எதிர்கட்சி அதிமுக முதல் ஆளாக பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.

24
ஊசலாடும் அதிமுக, பாஜக கூட்டணி

அதிமுக, பாஜக கூட்டணி அமைத்தாலும் அந்த கூட்டணியின் அடித்தளம் வலுவாக இல்லாமல் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷாவும் சரி, எடப்பாடியை மறைமுகமாக எதிர்க்கும் அண்ணாமலையும் சரி அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பதை இருவரும் மறந்தும் கூட சொல்லவில்லை.

திரியை கொளுத்திப் போட்ட அண்ணாமலை

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அதிமுக தலைவர்கள் ''அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது. ஈபிஎஸ் தான் அடுத்த முதல்வர்'' என்பதில் உறுதியாக உள்ளனர். இப்படியாக கூட்டணி காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், வழக்கம்போல் திரியை கொளுத்திப் போட்ட அண்ணாமலை, நேற்று செய்தியாளர்களிடம், ''அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறுகிறார். அவர் சொல்வதை கேட்காவிட்டால் நான் பாஜக தொண்டனே இல்லை'' என்று தெரிவித்தார்.

34
இன்று பல்டி அடித்த அண்ணாமலை

இதனால் மீண்டும் கூட்டணிக்குள் பரபரப்பு எழுந்தது. ஆனால் இன்று அப்படியே பல்டி அடித்த அண்ணாமலை, ''அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்பதை அமித்ஷாவே சொல்லி விட்டார்'' என்று விளக்கம் அளித்தார். இப்படியாக கூட்டணி குறித்து அண்ணாமலை உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் மாற்றி மாற்றி பேசுவதும் அதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிப்பதும் வாடிக்கையாகி விட்டது.

நயினார் நாகேந்திரன் விளக்கம்

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அதிமுக, பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ''2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அமித்ஷா மற்றும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்போம். திமுக ஆட்சியை விரட்ட வேண்டும். திமுக ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களது நோக்கம்'' என்று தெரிவித்தார்.

44
ட்விஸ்ட் வைத்து பேசினாரா நயினார்?

நயினாரின் இந்த பேச்சை உன்னிப்பாக கவனித்தோம் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று தெரிவித்த அவர் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பேச்சை கேட்போம் என்று சொல்லவில்லை. அமித்ஷாவும், ஈபிஎஸ்ஸும் என்ன சொல்கிறார்களோ அதை கேட்போம் என்று தான் கூறியுள்ளார். 

அதிமுக தலைவர்களை சமானப்படுத்தவே நயினார் ஈபிஎஸ் பெயரை சேர்த்து சொல்லியுள்ளதாகவும் முதல்வர் வேட்பாளர் உள்பட கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அமித்ஷா தான் எடுப்பார் எனவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories