நடுவழியில் நின்ற மின்சார ரயில்! சென்னையில் முடங்கிய ரயில் சேவை! பயணிகள் பரிதவிப்பு!

Published : Jul 18, 2025, 10:21 PM IST

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
14
Suburban Train Services Affected In Chennai

சென்னையில் கடற்கரை‍‍-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை‍-வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 சென்னையில் மெட்ரோ ரயில்கள் இருந்தாலும், மிகவும் குறைவான கட்டணத்தில் சரியான நேரத்தில் மக்களை கொன்டு சேர்ப்பதில் புறநகர் ரயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

24
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் வேலைக்கு வருபவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புறநகர் ரயில்கள் கைகொடுத்து உதவுகின்றன. ஆகையால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்படும்போதெல்லாம் பயணிகள் திக்குமுக்காடிப் போவார்கள். இந்ந்நிலையில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் அவதி

அதாவது சென்னை வியாசர்பாடியில் மின்சார ரயிலையும் மின் இணைப்புக் கம்பியையும் இணைக்கக்கூடிய க்ளிப் உடைந்ததால் மின்சார ரயில் நடுவழியில் நின்றது. இதனால் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூருக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

34
ரயில்வே அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமே ஸ்தம்பித்துள்ளது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்கள் வரவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் காத்துக்கிடக்கும் நிலையில், ரயில்கள் வரவில்லை அதிகரிகளும் கேட்டாலும் ரயில்கள் வரும் என்று சொல்கின்றனரே தவிர ரயில் வராததற்கு காரணம் எதும் சொல்லவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

44
ரயில் போக்குவரத்து அடிக்கடி பாதிப்பு

சமீபகாலமாக சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் டேங்கர் சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories