அடடே! அப்படியே 'குளு குளு' ஊட்டியாக மாறிய சென்னை! வெளுத்து வாங்கிய மழை! சென்னையன்ஸ் ஹேப்பி!

Published : Jul 19, 2025, 04:53 PM IST

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
Heavy Rain In Chennai

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதே வேளையில் மலைப்பகுதியை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் போதிய அளவு மழை இல்லை.

24
சென்னையில் கொட்டிய கனமழை

இதிலும் முக்கியமாக சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லை. சென்னையில் வெயில் கடுமையாக வாட்டி எடுத்த நிலையில், எப்போது மழை பெய்யும்? வருண பகவான் எப்போது கருணை காட்டுவார்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்த நிலையில், சென்னைவாசிகளின் மனதை குளிர்விக்கும் விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று மழை கொட்டியுள்ளது.

34
நகர், புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை

அதாவது மாம்பலம், கிண்டி, எழும்பூர், சேத்துப்பட்டு, சென்டிரல், கோயம்பேடு, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

44
சென்னை மக்கள் ஹேப்பி

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் மழை கொட்டியதால் சென்னை மற்றும் சென்னை புறநகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் சென்னையில் கனமழை கொட்டியுள்ளது.

நீலகிரி, கோவையில் தொடர் கனமழை

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் கோவையில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories