24 மணி நேரத்தில் 10 கொ**கள்! ஒன்னுமே தெரியாத ஒரு முதல்வர்! வெளுத்து வாங்கிய நயினார்!

Published : Jul 21, 2025, 07:17 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10 கொலைகள் நடந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PREV
14
Nainar Nagendran accused Deteriorating law and order in Tamil Nadu

தமிழ்நாட்டில் அண்மைகாலமாக கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை 10 நாட்களுக்கும் மேலாகியும் காவல் துறையால் பிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

24
24 மணி நேரத்தில் 10 படுகொலைகள்

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10 படுகொலைகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மட்டும் 10 படுகொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளன.

குற்றவாளிகளுக்கு பயம் இல்லை

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் குத்திக் கொலை, நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை, மதுபோதையில் இளைஞர் ஒருவர் கொடூரக் கொலை என நீளும் இந்தப் பட்டியலில் கொலையுண்டவர்களில் பாதி பேர் பெண்கள் என்பதும், மீதி கொலைகளின் பிண்ணனியில் போதை இருப்பதும் அறிவாலயத்தின் அலங்கோல ஆட்சிக்கான அவலச் சான்றுகள். பழுதடைந்து கிடக்கும் அரசு இயந்திரத்தினால் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது.

34
மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை இல்லை

மக்களுக்கு ஆளும் அரசின் மீது நம்பிக்கை இத்துப்போய் விட்டது. இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நல்லாட்சி என வெற்று விளம்பரங்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் திமுக தலைவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லையா? ஊர் ஊராக சென்று மக்களின் குறைகளைத் தீர்க்க மனு வாங்குவதாகக் கூறிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் முதலில் தமிழகத்தில் தினந்தோறும் நடக்கும் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

44
என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு முதல்வர்

தனது ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது தெரியாத ஒருவர், தனது ஆட்சியின் அவலங்களை நம்ப மறுக்கும் ஒருவர் முதல்வர் அரியணையில் தொடரலாமா? அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை இன்று ஆயுதங்களின் கிடங்காகவும் கொலைகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றினால் மட்டுமே இங்கு அறம் மலரும், சமூக நல்லிணக்கம் சாத்தியமாகும்'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories