இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இளைஞர்கள், இளம்பெண்களுக்கு படித்த படிப்புகேற்ற வேலை கிடைப்பதில்லை. தமிழ்நாட்டிலும் வேலைவாய்ப்பின்மை நிலவி வருகிறது. அரசு வேலைக்கு லட்சச்கணக்கான இளைஞர்கள் முயற்சி செய்தாலும் பணியிடங்கள் குறைவாக இருப்பதால் சில பேருக்கே வாய்ப்பு கிடைக்கிறது. ஆகையால் தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
24
இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம்
இதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் Unemployed Youth Employment Generation Programme (UYEGP) என்ற திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சொந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்ற வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களிடையே சுயதொழிலை மேம்படுத்துவதற்கும், இளைஞர்கள் இளம்பெண்கள் இளம் தொழில்முனைவோராகி சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
34
இளைஞர்கள் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம்
UYEGP திட்டத்தின் கீழ் தகுதியான இளைஞர்கள் ரூ.15 லட்சம் வரை கடன் பெற முடியும். இதற்கு 25% வரை அதிகபட்சம் ரூ. 2.5 லட்சம் வரை மானியமும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சொந்த தொழில் தொடங்கும் இளம் தொழில்முனைவோர் மீதான நிதிச்சுமையை குறைகிறது.
படித்த வேலையற்ற இளைஞர்களை, குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலை அல்லது சமூக-பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் மூலம் தொழில் முனைவராக முன்னேறலாம்.
UYEGP திட்டத்துக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சிறுபான்மையினர் பிரிவினருக்கு 45 வயதுக்குக் கீழ் வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பொருளாதாரரீதியாக பின்தங்கிய இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்குவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதால் இந்த அளவுகோல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.