சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது பாய்ந்த லேசர் லைட்! விமானி அதிர்ச்சி!

Published : May 26, 2025, 09:35 AM ISTUpdated : May 26, 2025, 10:27 AM IST

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
13
சென்னை விமான நிலையம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மீனம்பாக்கம் திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 326 பயணிகளுடன் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. சென்னையில் விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த போது சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் அடிக்கப்பட்டது.

23
விமானத்தில் லேசர் லைட்

இதனையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி 326 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார். பின்னர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானம் தரையிறங்கும் போது, அதற்கு இடையூறு செய்வது போல், லேசர் லைட் ஒளி விமானத்தின் மீது பீச்சி அடிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

33
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

இதனையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற லேசர் லைட்கள் அடிக்கும் சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories