சென்னை மக்களுக்கு ஸ்வீட் நியூஸ்! கிரீன் சிக்னல் கொடுத்த ரயில்வே! பல நாள் கனவு நிறைவேறப் போகுது!

Published : Aug 01, 2025, 06:45 PM IST

சென்னையில் பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் இணைப்பு திட்டத்துக்கு ரயில்வே வாரியம் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ளது.

PREV
14
Flying Train And Metro Rail Connection Project In Chennai

சென்னையில் பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் இணைப்பு திட்டத்துக்கு ரயில்வே வாரியம் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வேளச்சேரி - சென்னை கடற்கரை பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மெட்ரோ நிறுவனம் ரயில்வே வாரியத்திடம் திட்ட அறிக்கை சமர்பித்து இருந்தது. இந்த திட்ட அறிக்கைக்கு தான் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

24
சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரயில்வே

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நெட்வொர்க்குடன் ஒருங்கிணைத்தால் பயணிகள் எளிதாக ஒரு போக்குவரத்து அமைப்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறிச் செல்ல முடியும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மெட்ரோ ரயில் நிறுவனம் பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதுடன், ரயில்களை நவீனமயமாக்குதல், ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்துதல், நிகழ்நேர ரயில் கண்காணிப்பு மற்றும் சிறந்த பயணிகளுக்கான வசதிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

34
பொது போக்குவரத்து கட்டமைப்பு மேம்படும்

மேலும் இந்த திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடம், சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்தில் உள்ள தடம் 4 உடன் இணைக்கப்படும். இது தவிர இந்த இணைப்பின் மூலம் வேளச்சேரி, அண்ணா சாலை, பூந்தமல்லி போன்ற முக்கிய பகுதிகளுக்கு மெட்ரோ மூலம் தடையற்ற பயணம் மக்களுக்கு சாத்தியமாகும். இதன்மூலம் சென்னை நகரின் பொது போக்குவரத்து கட்டமைப்பை மேலும் மேம்படுத்த முடியும்.

44
பறக்கும் ரயில் சேவை போக்குவரத்துக்கு முதுகெலும்பு

இந்தியாவை பொறுத்தவரை தலைநகர் டெல்லியில் தான் மெட்ரொ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவை இணைந்து ஒரே அமைப்பாக செயல்படுகிறது. இப்போது சென்னையிலும் மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் ஒன்றாக இணைந்தால் டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மாறும். சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவை போக்குவரத்துக்கு முதுகெலும்பாக உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories