விஜய்யை கோபத்தில் ஆழ்த்திய தொண்டர்கள்! தவெகவினருக்கு முக்கிய உத்தரவு! இப்படி பண்ணாதீங்க!

Published : Jul 27, 2025, 08:43 AM IST

நடிகர் விஜய்ய்யின் தவெக தொண்டர்களுக்கு அக்கட்சி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.

PREV
14
Vijay Important Order To TVK Volunteers

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக ஆகும். பல நூறு கோடிகள் அள்ளிக் கொடுக்கும் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

24
விஜய்க்கு பெரும் இளைஞர்கள் ஆதரவு

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆதிக்கம் செய்து மாறி, மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இதற்கு மாற்றாக தமிழ்நாட்டில் காலுன்ற வேண்டும் என விஜய் நினைக்கிறார். இதனால் ஆளும் கட்சியின் திமுகவையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு ஏற்றார்போல் விஜய்ய்யின் பக்கம் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

தவெக தொண்டர்களால் விஜய் கோபம்

ஆனால் தவெக தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதுடையவர்கள் என்பதால் அவர்களின் செயல்பாடுகள் விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க வரும்போது மின்கம்பங்கள் மீது ஏறி நிற்பது, காவல் துறையினரின் தடுப்புகளை மீறி செல்வது போன்ற செயல்களில் சில தவெக தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

34
தவெக தொண்டர்களுக்கு முக்கிய உத்தரவு

அண்மையில் போலீசால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாருக்கு நீதி வேண்டி விஜய் தலைமையில் தவெகவினர் போராட்டம் நடத்தியபோது அக்கட்சியினர் சிலர் சாலையில் நடுவே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து சென்றனர். இதுவே விஜய்க்கும், தவெகவினருக்கும் கெட்ட பெயரை சம்பாதித்தது. இப்படியாக தவெகவின் இளைஞர்கள் கட்சியின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்டு வரும் நிலையில், தவெக தொண்டர்க்ள், நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துளது.

கட்சிக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது

இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:‍ தற்போது சட்டமன்ற தேர்தல் பரப்புரை காலம். கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டிய வேளை. கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கட்சித் தோழர்கள் ஒருபோதும் செயல்படக்கூடாது.

44
அனுமதிக்கப்படாத வாசகங்கள் வேண்டாம்

கட்சித் தலைமையால் முறைப்படி அறிவிக்கப்படாத, அனுமதிக்கப்படாத வேறு வாசகங்களையோ, புகைப்படத்தையோ, ஸ்டிக்கராகவோ, வேறு வடிவங்களாகவோ, கட்சி நிகழ்ச்சிகளுக்காக, பரப்புரைகளுக்காக அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்தக் கூடாது. கட்சியின் தலைமையால் பிரத்தியேகமாக தேர்தல் பரப்புரை சார்ந்து அங்கீகரிக்கப்படாத பேனர் டிசைன்கள். இலச்சினைகள், வாசகங்களை பயன்படுத்தக் கூடாது.

பொதுமக்களுக்கு இடையூறு கூடாது

அங்கீகரிக்கப்பட்ட இலச்சினைகள், வாசகங்களோடு மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், கட்சித் தலைவர் சார்ந்த வாசகங்கள் மற்றும் படங்களை தவிர்த்து வேறு வாசகங்களையோ, புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது. இதனை பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி சார்பில் நடத்தப்படும் உள்ளரங்கு. பொதுவெளி, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளின் போது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதேபோல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல், பொதுமக்களின் உற்ற தோழனாக செயல்பட வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories