அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பார்வையாளர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க போதிய இடவசதி ஏற்படுத்தவும், அத்தியாவசிய வசதிகள் மற்றும் பிற சேவைகளை திறம்பட நிர்வகிக்கவும் நுழைவு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பூங்கா விலங்குகளின் நலன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் பயனுள்ள அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.