Chennai Power Cut : சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Published : Jun 10, 2026, 06:28 AM IST

Power Cut: தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி நாளைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை.

PREV
14
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு

தமிழகத்தில் கோடை வெயில் முடிந்த பிறகும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீட்டில் எந்நேரமும் ஃபேன், ஏசி ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

24
மாதாந்திரப் பராமரிப்பு பணி

இதனிடையே தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தலைநகர் சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

34
திருவேற்காடு

சோத்துபெரும்பேடு

கிருதாலாபுரம், பூதூர், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை, வீச்சூர், வெள்ளிவயல், கண்டிகை, மாறம்பேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

திருவேற்காடு

காவேரி நகர், PH மெயின் ரோடு, ஜமால்ஸ் அபார்ட்மெண்ட் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

44
பல்லாவரம்

பம்மல், பாலாஜி நகர் 3 முதல் 18வது தெரு, சுப்பிரமணிய பாரதியார் தெரு 1 மற்றும் 2வது தெரு, ஏ.என்.பாண்டியன் தெரு, திருவள்ளூர் தெரு, குமரன் தெரு, திருபுரசுந்தரி தெரு, பிருந்தாவனம் தெரு, திருமுருகன் தெரு, ராகவேந்திரா தெரு, அண்ணா தெரு, பெரியார் தெரு, பாபு ரெட்டி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, பி. தொல்காப்பியர் தெரு, அண்ணாசாலை, மார்க்கெட் ரோடு, ராஜாங்கம் தெரு, என்எஸ்கே தெரு, கண்ணதாசன் தெரு, ஆறுமுகம் தெரு, அரவிந்தன் தெரு, சூரியம்மன் கோவில் தெரு, ஈஸ்வரன் நகர் 1 முதல் 10வது தெருக்கள், ஐயப்ப நகர் 1 முதல் 5வது தெருக்கள், பாசி தெரு, சுவாமி நாதன் நகர் 1 முதல் 5வது தெரு, மோசஸ் தெரு, சுவாமி நாதன் நகர் 1 முதல் 5வது தெரு வரை. பொழிச்சலூர் மெயின் ரோடு, அகத்தீஸ்வரர் நகர், ராமநாதன் நகர், பஜனைகோயில் தெரு, சித்திரை நகர், கக்கஞ்சி தெரு, பொழிச்சலூர், பிரேம் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ஈசிடிவி நகர், கல்லியம்மன் நகர், திருமூலர் தெரு, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories