Tamilnadu Rain: 6 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை! உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!

Published : Jul 24, 2025, 02:41 PM IST

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

PREV
14
Heavy Rains In 6 Places In Tamil Nadu

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அதாவது கோவை, தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு இல்லை. சென்னையை பொறுத்தவரை அவ்வப்ப்போது மழை பெய்கிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (ஜூலை 25) காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் – வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

34
6 மாவட்டங்களில் கனமழை

ஆகையால் இன்று (ஜுலை 24) மற்றும் நாளை (ஜூலை 25) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு

மேலும் 26 மற்றும் 27ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

 நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

44
சென்னையில் எப்படி?

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கலாம். 

மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories