சென்னை டூ வேலூர் இனி 2 மணி நேரத்தில் போகலாம்! 6 வழிச்சாலையில் பறக்கப் போகும் வாகனங்கள்! முழு விவரம்!

Published : Sep 01, 2025, 03:41 PM IST

சென்னையில் இருந்து வேலூருக்கு 6 வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
Chennai–Vellore 6 Lane Highway Travel In 2 Hours

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மிகவும் அத்தியாவசியம் ஆகும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சரக்குகளை விரைவாக எடுத்துச் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தால் தான் நாட்டின் வளர்ச்சி கூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை வேலூர் வழித்தடம் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தொழில் நகரமான சென்னையில் இருந்து ஐடி நகரமான பெங்களூருவை சாலை மார்க்கமாக இணைப்பதால் எப்போதும் பிசியான வழித்தடமாக இது அமைந்துள்ளது.

24
சென்னை டூ வேலூர் புதிய 6 வழிச்சாலை

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சென்னையில் இருந்து வேலூர் வரை 142 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. பசுமைவெளிச் சாலையாக அமையவுள்ள இந்த 6 வழிச்சாலை ஒரகடத்தில் உள்ள தொழில்துறை மையம், செய்யாறு சிப்காட் தொழில் பூங்கா மற்றும் வேலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் மற்றொரு சிப்காட் பூங்கா ஆகியவற்றை இணைக்கும் வகையில் போடப்பட உள்ளது.

சரக்கு போக்குவரத்து மேம்படும்

இந்த 6 வழிச்சாலை ஒரகடத்தின் மூன்று சிப்காட்கள் மற்றும் மற்ற தொழில் பிரிவுகளில் இருந்து காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு சரக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு அமைக்கப்படுகிறது. மேலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் கொண்டு வரப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் 4,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

34
4 மாவட்டங்க‌ளை இணைக்கும் சாலை

இந்த ஆறு வழிச்சாலை ஒரகடத்திற்கு அருகிலுள்ள சென்னை புறநகர் வெளிவட்டச் சாலையில் (CPRR) தொடங்கி, செய்யாறு சிப்காட் வழியாக வேலூர் மாவட்டத்தில் NH38-இல் முடிவடையும். இதில் ஒரகடத்தில் உள்ள CPRR-இல் இருந்து செய்யாறு சிப்காட்டிற்கு அருகிலுள்ள மங்கல் கூட்டு சாலை வரை செல்லும் 68 கி.மீ. பகுதி அடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை டூ வேலூர் 2 மணி நேரத்தில் போகலாம்

இந்த நெடுஞ்சாலை தற்போதைய பயண நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் சென்னையில் இருந்து வேலூருக்கு இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், ''இந்த 6 வழிச்சாலை திட்டத்திற்கு தேவையான நிதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் விவரங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது சென்னை-வேலூர் பயணத்தை 2 மணி நேரமாக குறைக்கும்'' என்றார்.

44
பொருளாதார வளர்ச்சி மேம்படும்

தற்போதைய சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை (NH-44) இணைக்கும் வகையில் புதிய 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆறு வழிச்சாலை, சென்னையையும் வேலூரையும் இணைப்பதோடு, இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இந்த நெடுஞ்சாலை மேம்பட்ட இணைப்பை வழங்கும். மேலும், இந்தத் திட்டம், சரக்கு போக்குவரத்தை எளிதாக்கி, வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்த உதவும்.

கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்?

இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை முடிந்தவுடன், நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்பந்ததாரர் தேர்வு உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும். இவை எல்லாம் இறுதி செய்யப்பட்ட பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories