நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தினம் தினம் தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் தெரு நாய்களின் ஆதிக்கம் அதிகம். குழந்தைகள், பெண்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. தெரு நாய்களால் சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன.
24
தீராத தெரு நாய்கள் தொல்லை
தெரு நாய்கள் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும் மக்களுக்கு சில நேரங்களில் ஆபத்தாக உள்ளது. சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு உயர்ரக நாய்களால் பலரை கடித்துள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. அண்மையில் விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியில் தெரு நாய்கள் விவகாரம் பேசப்பட்டு பெரும் வைரலாகி விட்டது. தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதே வேளையில் தெரு நாய்களை அப்புறப்படுத்த நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
34
சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் தெரு நாய்களுக்கு சென்னை மாநகராட்சி ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 30 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி அதற்கான அடையாளமாக நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்று மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும். மேலும் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து செல்லும்போது நாய்களன் வாயை மூடியிருக்க வேண்டும். இதை செயல்படுத்த தவறினால் நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.