8 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு தந்தையான ஜாகீர் கான்! க்யூட் போட்டோஸ் வைரல்!

Published : Apr 18, 2025, 03:01 PM IST

இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கானுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரது குழந்தையின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

PREV
14
8 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு தந்தையான ஜாகீர் கான்! க்யூட் போட்டோஸ் வைரல்!
Zaheer Khan

Zaheer Khan has a baby boy after 8 years: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பாஸ்ட் பவுலர் ஜாகீர் கான். 'யார்க்கர் கிங்' என அழைக்கப்படும் ஜாகீர் கான் இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 200 ஓடிஐ போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இப்போது ஜாகீர் கான் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக இருக்கிறார். 

24
Zaheer Khan, Cricket

ஜாகீர் கானின் மனைவி நடிகை சாகரிகா காட்கே. இவர் சக் தே இந்தியா படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்.  ஜாகீர் கான் மற்றும் சாகரிகா நீண்ட காலமாக காதலித்து வந்தனர். பின்னர், 2016 ஆம் ஆண்டு யுவராஜ் சிங்கின் திருமணத்தின்போது, சாகரிகாவும் ஜாகீரும் தங்கள் உறவை வெளிப்படுத்தினர். அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2017ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில், ஜாகீர் கான்  சாகரிகா காட்கே தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயத்தை சாகரிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதன் மூலம் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த ஜோடி இந்த நல்ல செய்தியைப் பகிர்ந்தவுடன், ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்து மழை பொழிந்தனர். மேலும் கிரிக்கெட் வீரர்கள் முதல் பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வரை அனைவரும் ஜாகீர்கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜாகீர் கான் தனது மகனின் பெயரை சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

MIக்கு எதிரான போட்டியில் புதிய கேப்டனை தேடும் CSK! தோனிக்கு என்ன ஆச்சி?

34
Zaheer Khan-Sagarika Ghatke couple

ஜாகீர் கான் மற்றும் சாகரிகா தம்பதியினர் இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். இதில் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள் உள்ளன. முதல் புகைப்படத்தில் குழந்தையுடன் அவர்கள் இருப்பது போல் தெரிகிறது. இதில் ஜாகீர் கான் தனது மகனை மடியில் வைத்திருக்கிறார். இரண்டாவது புகைப்படத்தில், அவர்கள் குழந்தையின் கையைப் பிடித்திருக்கிறார்கள். 

44
Zaheer Khan, Indian Team

இந்த இரண்டு புகைப்படங்களும் பார்க்க மிகவும் அழகாக இருக்கின்றன. ஜாகீர் கான் தனது மகனின் பெயருடன் கூடிய புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு ஒரு குறிப்பையும் எழுதினார். கடவுளின் அன்பு, கருணை மற்றும் ஆசீர்வாதங்களுடன் தங்கள் மகனுக்கு ஃபதே சிங் கான் என்று பெயரிட்டதாக அறிவித்தார். தற்போது இவர்கள் பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுரேஷ் ரெய்னா முதல் அங்கத் பேடி வரை அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஜாகீருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

கிளாசனின் விநோத தவறு! அவுட்டாகி சென்ற ரிக்கல்டன் மீண்டும் பேட்டிங்! இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா?

Read more Photos on
click me!

Recommended Stories