MIக்கு எதிரான போட்டியில் புதிய கேப்டனை தேடும் CSK! தோனிக்கு என்ன ஆச்சி?

Published : Apr 18, 2025, 10:44 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மும்பைக்கு எதிரான அடுத்த போட்டியில் சென்னை அணி புதிய கேப்டனுடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14
MIக்கு எதிரான போட்டியில் புதிய கேப்டனை தேடும் CSK! தோனிக்கு என்ன ஆச்சி?
CSK’s New Captain and Wicket-Keeper – IPL 2025

CSK Vs MI: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணியை வழிநடத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை அணியை அனுபவ வீரர் மகேந்திர சிங் தோனி தலைமை ஏற்று வழிநடத்தி வருகிறார். நடப்பு தொடரில் சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் நீடிக்கிறது.
 

24
CSK’s New Captain and Wicket-Keeper – IPL 2025

சிக்கலில் CSK?

இதனிடையே தொடரில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்றால் அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு போட்டியையும் கவனமாக விளையாடி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் Chennai Super Kings உள்ளது. தோனி கேப்டனாக பொறுப்பேற்றதால் அவர் இந்த பணியை சிறப்பாக செய்து CSKவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். அதனை நிரூபிக்கும் வகையில் கடந்த போட்டியில் லக்னோ (LSG) அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் தோனி பொறுப்பான, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தார்.

34
CSK’s New Captain and Wicket-Keeper – IPL 2025

பேட்டிங்கில் மிரட்டிய தோனி

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி 11 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட 26 ரன்களைக் குவித்தார். தோனியின் அதிரடியான ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. அதே நேரத்தில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கீப்பிங், ரன் எடுப்பதில் தோனி தனது முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் திணறியதைப் பார்க்க முடிந்தது. சில நேரங்களில் அவர் ரன் ஓடுவதில் சிரமப்பட்டார். தொடர்ந்து முழங்கால் வழியால் அவதிப்படும் அவர் போட்டி முடிந்து ஓய்வு அறைக்கு திரும்பும் போது சீரற்ற நிலையில் நடந்து செல்வதைப் பார்க்க முடிந்தது.
 

44
CSK’s New Captain and Wicket-Keeper – IPL 2025

சென்னைக்கு புதிய கேப்டன்?

இந்நிலையில் சென்னை அணி அடுத்த போட்டியில் வருகின்ற 20ம் தேதி மும்ப அணியை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக தொடரின் முதல் போட்டியில் சென்னையில் CSKவை எதிர்கொண்ட MI தோல்வியைத் தழுவியது. இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை அணி உள்ளதால் இந்த போட்டி சென்னைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஆனால் காயம் காரணமாக அவதிப்படும் தோனி மும்பைக்கு எதிரான போட்டியில் களம் இறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. MIக்கு எதிரான போட்டியல் சென்னை அணி புதிய கேப்டனுடன் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories