Virat Kohli Anushka Sharma Wedding Reception Photos : விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சச்சின் டெண்டுல்கர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Virat Kohli Anushka Sharma Wedding Reception Photos : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விராட் கோலி விளையாடி வருகிறார்.
26
ஆர்சிபி டிராபி வெல்லவில்லை
இதுவரையில் நடைபெற்ற 17 சீசன்களில் ஒரு முறை கூட ஆர்சிபி டிராபி வெல்லவில்லை. தற்போது நடைபெற்று வரும் 18ஆவது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி டிராபி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சாத்தியக் கூறுகளும் 65 சதவிகிதம் உள்ளது.
36
விராட் கோலி
இந்த தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரையில் ஆர்சிபி விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
46
விராட் கோலி ரன்கள்
இந்த தொடரில் விராட் கோலி முறையே 59*, 31, 7, 67, 22, 62* என்று மொத்தமாக 248 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு டிசம்பர் 21ஆம் தேதி டெல்லியில் உள்ள தாஜ் அரண்மனையில் முதல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2ஆவது வரவேற்பு நிகழ்ச்சியானது மும்பையில் 26ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
66
சச்சின் டெண்டுல்கர், ஏ ஆர் ரஹ்மான், மறைந்த நடிகை ஸ்ரீதேவி, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நீதா அம்பானி, சாரா டெண்டுல்கர், ஷாருக்கான், கத்ரீனா கைஃப என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.