Published : Apr 18, 2025, 01:09 AM ISTUpdated : Apr 18, 2025, 01:10 AM IST
அவுட்டாகி பெவிலியன் சென்ற மும்பை இந்தியன்ஸ் வீரர் ரிக்கல்டன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விக்கெட் கீப்பர் கிளாசன் செய்த விநோதமான தவறால் மீண்டும் பேட்டிங் செய்தார்.
IPL: Why Ryan Rickelton Was Given Not-Out: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிகப்பட்சமாக 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். ஹென்ரிச் கிளாசன் 37 ரன்கள் அடித்தார்.
24
Ryan Rickelton, IPL
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் வில் ஜாக்ஸ் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியனஸ் அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பவுலிங்கில் 3 விக்கெட்டும், பேட்டிங்கில் 36 ரன்னும் அடித்த வில்க் ஜாக்ஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். மும்பை அணி சேஸ் செய்தபோது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரியான் ரிக்கல்டன் 21 ரன்னில் அன்சாரி வீசிய ஷார்ட் பந்தை அடிக்க முயன்றபோது பேட் கம்மின்ஸிடம் கேட்ச் ஆனார்.
இதனால் ரிக்கல்டன் ஏமாற்றமடைந்து பெவிலியன் திரும்பினார். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் துள்ளிக்குதித்தனர். இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ்வும் உள்ளே புகுந்தார். அந்த நேரத்தில் பெவிலியன் சென்ற ரியான் ரிக்கல்டனை நடுவர்கள் மீண்டும் உள்ளே பேட்டிங் செய்ய அழைத்தனர். பவுலர் நோ பால் ஏதும் போடாததால் ரிக்கல்டன் திரும்ப அழைக்கப்பட்டது ஏன்? என அனைவரும் குழப்பத்தில் ஆழந்தனர்.
அப்போது ரீப்ளையில் தான் சன்ரைசர்ஸ் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் செய்த தவறால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதும், ரியான் ரிக்கல்டன் மீண்டும் உள்ளே அழைக்கப்பட்டதும் தெரியவந்தது. அதாவது ரிக்ல்டன் பந்தை அடிக்கும்போது விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசனின் கையுறை ஸ்டம்பிற்கு முன்னால் இருந்தது. இதனால் அந்த பந்து நோ-பால் என மூன்றாவது நடுவர் அறிவித்தார்.
44
heinrich klaasen, Cricket
கிரிக்கெட்டில் ஐசிசி 27.3.1 விதியின்படி பந்து வீச்சாளர் பந்தை வீசும்போது, பந்து பேட்ஸ்மேனின் மட்டை அல்லது உடலில் படும் வரை அல்லது ஸ்டம்பைக் கடக்கும் வரை விக்கெட் கீப்பர் முழுமையாக ஸ்டம்பிற்குப் பின்னால் இருக்க வேண்டும். ஆனால் கிளாசன் அன்சாரி வீசிய பந்து பேட்ஸ்மேன் கிட்டே வரும் முன்பே கையை ஸ்டெம்புக்கு முன்னால் கொண்டு சென்றார். ஐசிசி விதியை அவர் மீறியதால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டு ரிக்கல்டன் மீண்டும் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றார்.
மிகப்பெரும் அதிர்ஷ்டம் துணை நின்றாலும், ரிக்ல்டனால் அதிக நேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. தொடர்ந்து 2 பவுண்டரி விளாசிய ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த ஓவரிலேயே 31 ரன்கள் எடுத்த நிலையில்
டிராவிஸ் ஹெட் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.