மருத்துவமனைக்கு அள்ளிக் கொடுத்த சுப்மன் கில்! ஏழை மக்களுக்கு உதவி! ரசிகர்கள் பாராட்டு!

Published : Apr 17, 2025, 09:43 PM IST

இந்திய வீரர் சுப்மன் கில் மருத்துவமனைக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வழங்கியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

PREV
14
மருத்துவமனைக்கு அள்ளிக் கொடுத்த சுப்மன் கில்! ஏழை மக்களுக்கு உதவி! ரசிகர்கள் பாராட்டு!

Shubman Gill donates equipment worth rs.35 lakhs to hospital: இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா களைகட்டி வருகிறது. தினமும் பரபரப்பான போட்டிகள் சென்று வரும் நிலையில், நடப்பு தொடரில் சுப்மன் கில் தலைமையிலான குஜாரத் அணி 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் ரன்களை சேர்க்கும் சுப்மன் கில், தந்து சிறப்பான கேப்டன்சி மூலமும் அணியை வெற்றி பெறச் செய்து வருகிறார். 

24
Gujarat Titans, Shubman Gill

இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், இந்தியாவில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக பிரபலமான வீரராக விளங்கி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது அசத்தலான பேட்டிங் மூலம் ரன்களை குவித்து வரும் சுப்மன் கில், பிசிசிஐ கொடுக்கும் சம்பளம் மட்டுமின்றி பல்வேறு முன்னணி பிராண்ட்களுக்கு விளம்பரம் செய்து வருமானம் ஈட்டி வருகிறார். 

தான் சம்பாதிக்கும் பணத்தை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல வழிகளுக்கும் பயன்படுத்தி வருகிறார் கில். இந்நிலையில், மொஹாலியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை சுப்மன் கில் நன்கொடையாக அளித்துள்ளதாக ஆன்லைன் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது வென்டிலேட்டர்கள், சிரிஞ்ச் பம்புகள், ஓடி மேசைகள், சீலிங் லைட்டுகள், ஐசியு படுக்கைகள் மற்றும் எக்ஸ்ரே இயந்திரங்கள் என ரூ.35 லட்சம் மதிப்புடைய முக்கியமான உபகரணங்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். 

கம்பீரின் நெருங்கிய நண்பர்! இந்திய அணி உதவி பயிற்சியாளரை தூக்கி எறிந்த பிசிசிஐ! என்ன காரணம்?

34
Shubman Gill, IPL

''சுப்மன் கில்லின் நன்கொடை மருத்துவமனை நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெரிதும் உதவும். தேவையை மதிப்பிட்ட பிறகு இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படும். வேறு ஏதேனும் மருத்துவமனைக்கு தேவைப்பட்டால், அதை வழங்க முடியும்'' என்று சிவில் சர்ஜன் டாக்டர் சங்கீதா ஜெயின் கூறியுள்ளார். சுப்மன் கில் மொஹாலியில் குழந்தையாக இருந்தபோது நகரத்தின் 10 ஆம் கட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் பயிற்சி பெற்றார். அவர் மொஹாலியில் ஒரு வீட்டையும் கட்டி வருகிறார் என்று தகவல்கள் கூறுவதால் மொஹாலிக்கும் அவருக்குமான நெருக்கம் அதிகரித்து வருகிறது.

44
Shubman Gill, Cricket

இந்திய கிரிக்கெடின் இளவரசர் என அழைக்கப்படும் சுப்மன் கில், ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து உண்மையிலேயே இளவரசராக ஜொலித்துள்ளர். கில்லின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ''இளம் வயதில் பெரும்பாலான வீரர்கள் வருமானம் ஈட்டுவதில் மட்டும் குறியாக இருக்கும் நிலையில், சுப்மன் கில் சம்பாதிக்கும் பணத்தை மக்களுக்காவும் செலவிடுகிறார். இதன்மூலம் அவர் இளம் வீரர்களுக்கு மட்டுமின்றி மூத்த வீரர்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளார்'' என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிராவிஸ் ஹெட்டை வைத்து ஆர்சிபியை அவமானப்படுத்திய Uber! நீதிமன்றத்தில் RCB வழக்கு!
 

Read more Photos on
click me!

Recommended Stories