தொடர்ந்து சாலைகளில் செல்வபவர்களை பார்த்து கையசைக்கும் டிராவிஸ் ஹெட், ஆர்சிபிக்கு தான் தலைவலியாக இருப்பேன் என்பதுபோல் சைகை செய்கிறார். இந்த விளம்பரத்தில் 'ராயல் சேலஞ்ச்ட் பெங்களூர்' என்ற வாசகம் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ராயல் சேலஞ்ச்ட் பெங்களூர்' என்று கூறி ஆர்சிபி பிராண்டை கேலி செய்வதாகக் கூறி, அந்த விளம்பரத்தை உடனடியாக நீக்கக் கோரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிராவிஸ் ஹெட் இடம்பெறும் விளம்பரத்தில் ஆர்சிபியின் பிராண்ட் இமேஜை உபர் சேதப்படுத்தியதாக பெங்களூரு அணி நிர்வாகம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. இதைச் செய்வதன் மூலம், அவர்களின் வர்த்தக முத்திரையை நீர்த்துப்போகச் செய்வதை நேரடியாகத் தாக்குவதாக அது கூறியது. ஆர்சிபி அணியை கேலி செய்யும் ஒரே நோக்கத்துடன் இந்த விளம்பரம் படமாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 'இது இந்த சீசனின் கோப்பை' என்ற அவர்களின் வாசகத்தையும் அந்த விளம்பரம் கேலி செய்வதாக உரிமையாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.