குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025: 12 அணிகளின் கேப்டன்கள் யார்? யார்? முழு விவரம்!

Published : Apr 17, 2025, 02:52 PM IST

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 நாளை தொடங்குகிறது. இதில் ஆண்கள் அணிகள் மற்றும் பெண்கள் அணிகள் கேப்டன்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025: 12 அணிகளின் கேப்டன்கள் யார்? யார்? முழு விவரம்!

GIPKL 2025 Championship Trophy: குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் நாளை (ஏப்ரல் 18) குருகிராமில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது.  இந்த லீக்கில் எகிப்து, கென்யா, அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே மற்றும் போலந்து போன்ற நாடுகளின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கபடி விளையாட்டை உலகளவில் மேம்படுத்த, பிரபலபடுத்த இந்த லீக் நடத்தப்படுகிறது. 

24
GIPKL 2025 Championship Trophy

ஆண்கள் அணிகள், பெண்கள் அணிகள் 

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி 6 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி என மொத்தம் 12 அணிகள் விளையாடுகின்றன. அணிகள் தங்கள் பிராந்திய அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் மூலோபாய ரீதியாக பெயரிடப்பட்டுள்ளன:

பெண்கள் அணிகள்: மராத்தி ஃபால்கன்ஸ், போஜ்புரி லியோபார்ட்ஸ், தெலுங்கு லியோபார்ட்ஸ், தமிழ் லயன்ஸ், பஞ்சாபி டைகர்ஸ் மற்றும் ஹரியான்வி ஈகிள்ஸ்

ஆண்கள் அணிகள்: மராத்தி ஈகிள்ஸ், போஜ்புரி லியோபார்ட்ஸ், தெலுங்கு பாந்தர்ஸ், தமிழ் லயன்ஸ், பஞ்சாபி டைகர்ஸ் மற்றும் ஹரியான்வி  ஷார்க்ஸ்

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025; முதல் சீசனுக்கான சாம்பியன்ஷிப் டிராபி வெளியீடு!

34
Kabaddi League

GI-PKL நடத்தப்படுவதன் நோக்கம் 

GI-PKL முதல் சீசன் பற்றி பேசிய HIPSA இன் தலைவர் காந்தி டி. சுரேஷ், ''GI-PKL இன் சீசன் 1, ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளின் உச்சக்கட்டமாகும், இதில் கபடி விளையாட்டை உலகளவில் பரப்புவதற்கும், ஒரு சாத்தியமான ஒலிம்பிக் விளையாட்டாக உலகம் அங்கீகரிக்க ஊக்குவிப்பதற்கும் கவனம் செலுத்தப்படுகிறது. GI-PKL-ஐ ஒரு முதன்மையான உலகளாவிய கபடி போட்டியாக மாற்றுவதற்கும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு சீசனிலும் கண்டங்கள் முழுவதும் உள்ள வீரர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்'' என்றார்.

44
GI-PKL Captains

ஆண்கள் அணிகள் மற்றும் கேப்டன்கள்:

மராத்தி ஈகிள்ஸ் - கபில் நர்வால்
போஜ்புரி லியோபார்ட்ஸ்- ஷிவ் பிரசாத்
தெலுங்கு பாந்தர்ஸ் - சந்தீப் கண்டோலா
தமிழ் லயன்ஸ் - சுனில் நர்வால்
பஞ்சாபி டைகர்ஸ் - சவின் நர்வால்
ஹரியான்வி ஷார்க்ஸ் - விகாஷ் தஹியா

பெண்கள் அணிகள் மற்றும் கேப்டன்கள்:

மராத்தி ஃபால்கன்ஸ் - தனு ஷர்மா
போஜ்புரி லியோபார்ட்ஸ்,- மீனா காத்யன்
தெலுங்கு லியோபார்ட்ஸ்,- ஜூலி பதி
தமிழ் லியோனஸ்- சுமன்
பஞ்சாபி டைகர்ஸ்- மீரா
ஹரியான்வி ஈகிள்ஸ்- புஷ்பா ராணா

GIPKL 2025: ஏப்ரல் 18 முதல் ஒவ்வொரு நாளும் 3 போட்டிகள் ; களைகட்டும் கபடி திருவிழா!

Read more Photos on
click me!

Recommended Stories