சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஓட விட்ட மும்பை இந்தியன்ஸ்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Published : Apr 17, 2025, 11:51 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

PREV
14
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஓட விட்ட மும்பை இந்தியன்ஸ்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

IPL: Mumbai Indians beat Sunrisers Hyderabad: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிகப்பட்சமாக 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். ஹென்ரிச் கிளாசன் 37 ரன்கள் அடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் (28 ரன்), இஷான் கிஷன் (2 ரன்) ஏமாற்றினார்கள்.

24
Mumbai Indians, IPL

மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் வில் ஜாக்ஸ் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா நான்கு ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 1 விக்கெட் சாய்த்தார். இதனைத் தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.

ஓரளவு சிறப்பான தொடக்கம் கொடுத்த ரோகித் சர்மா 16 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 26 ரன் அடித்து கம்மின்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 31 ரன்னில் ஹர்சல் படேல் பந்தில் அவுட் ஆனார். பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கிய வில் ஜாக்ஸ் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 36 ரன் அடித்தார்.

மருத்துவமனைக்கு அள்ளிக் கொடுத்த சுப்மன் கில்! ஏழை மக்களுக்கு உதவி! ரசிகர்கள் பாராட்டு!

34
SRH vs MI, Cricket

சூர்யகுமார் யாதவ் (26 ரன்), ஹர்திக் பாண்ட்யா (21 ரன்) கணிசமான பங்களிப்பு செய்தனர். கடைசியில் திலக் வர்மா பொறுப்புடன் விளையாடி 21 ரன் எடுத்டு அணியை வெற்றி பெற செய்தார். முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 26 ரன் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் கலக்கிய வில் ஜாக்ஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். 

44
IPL 2025, Will Jacks

7வது போட்டியில் விளையாடிய மும்பை இந்தியனஸ் அணிக்கு இது 3வது வெற்றியாகும். அந்த அணி 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் 7வது போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது 5வது தோல்வியாகும். அந்த அணி 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 20ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீரின் நெருங்கிய நண்பர்! இந்திய அணி உதவி பயிற்சியாளரை தூக்கி எறிந்த பிசிசிஐ! என்ன காரணம்?

Read more Photos on
click me!

Recommended Stories