மறைந்த கால்பந்து வீரருக்காக 148 ஆண்டு பாரம்பரியத்தை மாற்றிய விம்பிள்டன்! முழு விவரம்!

Published : Jul 04, 2025, 09:22 PM IST

மறைந்த கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டாவுக்காக விம்பிள்டன் 148 ஆண்டு பாரம்பரிய ஆடை குறியீட்டை கைவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

PREV
14
Wimbledon Abandons 148 Year Old Traditional Dress Code For Diego Jota

லிவர்பூல் கால்பந்து கிளப்பின் ஸ்டார் வீரரும், போர்ச்சுகல் அணியின் தேசிய வீரருமான 28 வயதான டியாகோ ஜோட்டா (Diogo Jota) ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதே காரில் பயணித்த அவரது சகோதரரும் கால்பந்து வீரருமான 26 வயதான ஆண்ட்ரே சில்வாவும் மரணம் அடைந்தார். 

ஸ்பெயினின் சமோரா மாகாணத்தில் உள்ள A52 நெடுஞ்சாலையில் செர்னாடில்லா என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது திடீரென டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்து தீப்பிடித்து எரிந்து இருவரும் பலியாயினர்.

24
டியாகோ ஜோட்டா கார் விபத்தில் பலி

டியாகோ ஜோட்டா லிவர்பூல் கிளப்புக்காக 182 போட்டிகளில் 65 கோல்களை அடித்துள்ளார். கடந்த சீசனில் லிவர்பூல் பிரீமியர் லீக்கை வெல்ல பெரிதும் உதவியாக இருந்தார். மேலும் திருமணமாகி 10 நாட்களே ஆன நிலையில் டியாகோ ஜோட்டா உயிரிழந்தது கால்பந்து ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டியாகோ ஜோட்டா மறைவையொட்டி 148 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக விம்பிள்டன் முழு வெள்ளை நிற ஆடைக் குறியீட்டில் தளர்வை அறிவித்துள்ளது.

34
விம்பிள்டன் உடையில் தளர்வு

அதாவது லிவர்பூல் மற்றும் போர்ச்சுகல் ஃபார்வர்ட் டியோகோ ஜோட்டாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்பில் வீரர்கள் கருப்பு கைப்பட்டைகளை அணிய ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளனர்.போர்ச்சுகல் டென்னிஸ் வீரர் பிரான்சிஸ்கோ கப்ரால் ஏற்கனவே கருப்பு ரிப்பன் அணிந்து தனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். இது, விம்பிள்டனின் கண்டிப்பான உடை விதிமுறையில் ஒரு அரிய தளர்வாகும்.

44
விம்பிள்டன் பாரம்ப‌ரியம் என்ன?

மற்ற டென்னிஸ் போட்டிகளை போல் இல்லாமல் விம்பிள்டனில் விளையாடும் வீரர், வீராங்கனைகள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து விளையாட வேண்டும் என்பது நீண்டகால பாரம்பரியாகும். இப்போது மறைந்த கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டாவுக்காக விம்பிள்டன் அந்த விதிகளை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக பேசிய பிரான்சிஸ்கோ கப்ரால், ''ஜோட்டா போர்ச்சுகலில் மட்டுமல்ல, உலகிலும் ஒரு பெரிய பெயர். அவர் ஒரு நல்ல குடும்பம் மற்றும் மூன்று குழந்தைகளைக் கொண்ட ஒரு சிறந்த மனிதர். ஆனால் அவரது குடும்பத்திற்கு, அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம்'' என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories