IPL: Who is Ashwani Kumar: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் வெறும் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு பேட்டிங் செய்த மும்பை அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
Mumbai Indians, Ashwani Kumar
இந்த போட்டியின் மூலம் ஐபிஎல்லில் அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் வீரர் அஸ்வனி குமார் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார். 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார் முதல் போட்டியிலேயே அஜிங்யா ரஹானே, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல் மற்றும் மணிஷ் பாண்டே என உலகத்தரம் வாய்ந்த வீரர்களை அவுட்டாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அஸ்வனி குமார் பஞ்சாப் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
2022 ஆம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி டிராபியுடன் தனது உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். விஜய் ஹசாரே டிராபியிலும் பஞ்சாப் அணிக்காக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது தவிர முதல்தர கிரிக்கெட்டின் சில போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். ஷெர்-இ-பஞ்சாப் டி20 உள்நாட்டு கிரிக்கெட்டில் BLB பிளாஸ்டர்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அஸ்வனி குமாரின் திறமை வெளியுலகத்துக்கு தெரியவந்தது.
KKR கதையை முடித்த அறிமுக வீரர் அஸ்வனி குமார்! மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி!
Who is the Ashwani Kumar
அஸ்வனி குமார் டெத் ஓவர்களில் மிகவும் சிறப்பாக செயல்படக்கூடியவர். பஞ்சாபில் இவர் யார்க்கர் கிங் என்றும் அழைக்கப்படுகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான யார்க்கர் பந்துவீச்சின் மூலம் பலரை காலி செய்துள்ளார். முதல் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி அஸ்வனி குமார் தனது ஐபிஎல் அறிமுக போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி பெரிய சாதனை படைத்தார். முதல் பந்திலேயே கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை அவுட்டாக்கினார்.
IPL 2025, KKR vs MI
இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப், டேவெல்ட் ப்ரூவிஸ், அலி மோர்டாசா ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். முதல் போட்டியிலேயே அசத்தியுள்ளதால் அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வனி குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 25 வயதான கேரளாவை சேர்ந்த விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
தோனியால் 10 ஓவர் பேட்டிங் ஆட முடியாது! அப்படினா 'இது' மட்டும் எப்படி? ரசிகர்கள் கேள்வி!