இறுதிவரை எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று விளையாடாததால் 16.2 ஓவர்களில் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெறும் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் தனது முதல் போட்டியில் விளையாடிய அஸ்வனி குமார் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தீப சாஹர் 2 விக்கெட் வீழ்த்தினார். போல்ட், சாண்ட்னர், விக்னேஷ் புத்தூர், ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
பின்பு எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள். ஒரு சிக்சர் அடித்த கேப்டன் ரோகித் சர்மா (13 ரன்) ரஸல் பந்தில் கேட்ச் ஆனார். அதே வேளையில் மறுமுனையில் இருந்த ரியான் ரிக்கல்டன் சிக்சர் மழை பொழிந்து ஐபிஎல்லில் தனது முதலாவது அரைசதம் விளாசினார்.