CSK Fans oppose Stephen Fleming comment about MS dhoni: ஐபிஎல் கிரிக்கெட்டில் கவுகாத்தி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. 21 பந்துகளில் அரைசதம் அடித்த நிதிஷ் ராணா 36 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 81 ரன்கள் எடுத்தார். பின்பு விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
MS Dhoni, CSK, IPL
கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ( 44 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 63 ரன்கள்) தவிர மற்ற அனைவரும் சொதப்பினார்கள். 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய எம் எஸ் தோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 11 பந்தில் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 43 வயதான தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு பின்னால் தோனி 9வது இடத்தில் களமிறங்கியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
தோனியை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்ததால் நேற்றைய போட்டியில் தோனி 7வது இடத்தில் களமிறங்கினார். இந்நிலையில், சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் நிலை குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மௌனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேசிய அவர், ''தோனியின் முழங்கால்கள் முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நகர்கிறார், ஆனால் அதில் இன்னும் ஒரு தேய்மானம் இருக்கிறது. அவரால் முழுமையாக பத்து ஓவர்களில் நின்று விளையாட முடியாது'' என்றார்.
ஏன் தோனி கீழ் வரிசையில் பேட் செய்கிறார்? பிளெமிங் விளக்கம்!
IPL, Cricket News in Tamil
தொடர்ந்து பேசிய ஸ்டீபன் பிளெமிங், ''தோனியின் இருப்பு அணிக்கு மிகவும் முக்கியமானது. ஆட்டம் சமநிலையில் இருந்தால் தோனி கொஞ்சம் முன்னதாக களமிறங்குவார். மற்ற நேரங்களில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிப்பார்'' என்றார். ஸ்டீபன் பிளெமிங் பேச்சுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
''தோனியால் 10 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்றால் அவர் 20 ஓவர் முழுவதும் களத்தில் நின்று விக்கெட் கீப்பிங் செய்வது எப்படி? இப்படி முழு உடற்தகுதி இல்லாமல் எதற்காக அவர் கிரிக்கெட் விளையாட வேண்டும்'' என்று ஒரு சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ''தோனியை சிஎஸ்கேவின் விளம்பர மாடலாக அந்த அணி பார்க்கிறது. அவரை வைத்து ரசிகர்களை முட்டாளாகி சிஎஸ்கே நிர்வாகமும், பிசிசிஐயும் பணம் சம்பாதிக்கிறது''என்று வேறு சில ரசிகர்களும் காட்டமாக கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
MS Dhoni, Sports News, Asianet news tamil
சிஎஸ்கே ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் சிஎஸ்கே அணி தோற்றாலும் பரவாயில்லை. தோனி ஒரு சிக்சர் அடித்ததை பார்த்ததே எங்களுக்கு போதும். இதற்கு மேல் என்ன வேண்டும்? என கூறுகின்றனர். இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட சிஎஸ்கே நிர்வாகம், தோனி களத்தில் வரும்போது வைப் ஏத்தி சென்னை ரசிகர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதாக ஒருசிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஷேன் வார்ன் இறப்புக்கு 'அந்த' மாத்திரை தான் காரணமா? 3 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மை!