'பெரும்பாலான உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் கவலை மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் உரிய ஆலோசனைக்குப் பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது. இதற்கிடையே ஒரு வாரத்துக்கு பிறகு எந்தவித பதற்றமும் இன்றி அமைதியாக காணப்படும் தென்மாநிலங்களான சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
ஐபிஎல் மீண்டும் தொடங்குவது எப்போது?
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எந்தவித ட்ரோன் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடைபெறாததால் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய எல்லையோர மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும்? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.