RCB IPL 2025 Ticket Refund for Cancelled Match in Bengaluru : மே 13 மற்றும் 17 தேதிகளில் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது டிக்கெட் பணத்தை முழுமையாகத் திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது.
RCB IPL 2025 Ticket Refund for Cancelled Match in Bengaluru : மே 13 மற்றும் 17 தேதிகளில் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது டிக்கெட் பணத்தை முழுமையாகத் திருப்பித் தருவதாக சனிக்கிழமையன்று அறிவித்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதால், நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
26
ஐபிஎல் 2025 - இந்தியன் பிரீமியர் லீக்
இதுவரையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசனில் 58 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியும் மின் தடை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எஞ்சிய போட்டிகள் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
36
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஹோம் மைதான டிக்கெட் கட்டணம்
இதன் காரணமாக வரும் 13 மற்றும் 17ஆம் தேதிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஹோம் மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால், அந்தப் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டபடி அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் பெங்களூருவில் நடக்க இருந்த 2 போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திருப்பி கொடுக்க ஆர்சிபி முடிவு செய்துள்ளது.
இது குறித்து RCB தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "மே 13 மற்றும் 17, 2025 தேதிகளில் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறவிருந்த #RCBvSRH மற்றும் #RCBvKKR போட்டிகளுக்கான அசல் டிக்கெட் வைத்திருப்பவர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முழு பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவர்கள். நேரடி டிக்கெட் வைத்திருப்பவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும். டிஜிட்டல் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் வழியாக விரைவில் அனுப்பப்படும்." என்று பதிவிட்டுள்ளது.
56
ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்த பிசிசிஐ
போட்டியின் மீதமுள்ள போட்டிகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்த பிசிசிஐ, புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றது. "நடப்பு ஐபிஎல் 2025 போட்டிகளின் மீதமுள்ள போட்டிகளை உடனடியாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, நிலைமையை விரிவாக மதிப்பிட்ட பிறகு, போட்டியின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள் குறித்த கூடுதல் புதுப்பிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்," என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அறிக்கையில் தெரிவித்தார்.
66
"தங்கள் வீரர்களின் கவலைகள் மற்றும் உணர்வுகளைத் தெரிவித்த பெரும்பாலான அணிகள், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகளுக்குப் பிறகு, முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது; பிசிசிஐ நமது ஆயுதப் படைகளின் பலம் மற்றும் தயார்நிலையில் முழு நம்பிக்கை வைத்துள்ளது, அனைத்து பங்குதாரர்களின் கூட்டு நலனுக்காகச் செயல்படுவது புத்திசாலித்தனம் என்று வாரியம் கருதியது," என்று அவர் மேலும் கூறினார்.