சாம்பியன் இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கு எவ்வளவு கிடைக்கும்?

Published : Mar 10, 2025, 12:28 PM IST

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசுத்தொகை கிடைக்கும்?, மற்ற அணிகளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
சாம்பியன் இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கு எவ்வளவு கிடைக்கும்?

Champions Trophy Prize Money: மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை கையில் ஏந்தியுள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது வீரர்கள் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளனர். 
 

24
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்தியா

இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அர்சியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை வாரி வழங்கியுள்ளது.

அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மொத்த பரிசுத்தொகை 6.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய திப்பில் சுமார் ரூ.60 கோடி) ஆகும். இது 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட சுமார் 53% அதிகம். சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19.5 கோடி) கிடைக்கும். 
 

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? மனம்திறந்து பேசிய ரோகித் சர்மா, விராட் கோலி!

34
சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகை

இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணி 1.12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 9.78 கோடி) கிடைக்கும். அரையிறுதியுடன் வெளியேறி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 5,60,000 அமெரிக்க டாலர்களை (ரூ. 4.89 கோடி) பெறும். சாம்பின்ஸ் டிராபி லீக்கில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற‌ அணிக்கு 34,000 டாலர்கள் (ரூ.30 லட்சம்) கிடைக்கும். 

44
சாம்பியன்ஸ் டிராபி பரிசு மழை

ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்த ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 3,50,000 டாலர்களை (சுமார் ரூ.3 கோடி) பெறும். கடைசி இடங்களான ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் 1,40,000 டாலர்கள் (சுமார் ரூ.1.2 கோடி) கிடைக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற எட்டு அணிகளுக்கும் போட்டியில் பங்கேற்றதற்காக குறைந்தபட்சம் 1,25,000 டாலர்கள் (ரூ.1.08 கோடி) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்தது ஏன்? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?

click me!

Recommended Stories