Cricket fans' tent: Chennai beaches: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பவுண்டரியும், சிக்சர்களுமாக 76 ரன்களை விளாசிய ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
24
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி
இந்த வெற்றியின் மூலம் 2000ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அடைந்த தோல்விக்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதில் சொல்லு நேம்விதமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. கோப்பையை கையில் ஏந்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வெற்றியை கொண்டினார்கள். சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பெசண்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் இந்தியா, நியூசிலாந்து இறுதிப்போட்டியை நேரலையில் கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த இரண்டு இடங்களிலும் பெரிய திரை அமைக்கப்பட்டு அதன்மூலம் ரசிகர்கள் இறுதிப்போட்டியை கண்டு ரசித்தனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு இறுதிப்போட்டியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெற்றவுடன் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
44
சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த போட்டிக்கு பிறகு கொண்டாட்டத்தில் திளைத்த ரசிகர்கள் கூறுகையில், ''நமது அணி மீண்டும் ஒரு சாம்பியன் பட்டத்தை கையில் ஏந்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ரோகித் சர்மா முக்கியமான ஆட்டத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். கே.எல்.ராகுல் இந்த தொடர் முழுவதும் மேட்ச் வின்னராக போட்டிகளை நிறைவு செய்துளார். வருண் சக்கரவர்த்தி தனது பவுலிங் மூலம் எதிரணிகளை முடக்கிப் போட்டார்'' என்றனர்.