ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஐந்து முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே இந்த சீசனில் மிகவும் படுமோசமாக விளையாடி இருக்கிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்று 9ல் தோல்வி அடைந்து வெறும் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கெனவே சிஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறி விட்டது.
24
சிஎஸ்கே அணியில் உர்வில் படேல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணியில் இளம் வீரர் வான்ஷ் பேடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். வான்ஷ் பேடி சிஎஸ்கே அணியில் இருந்தாலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், வான்ஷ் பேடிக்கு பதிலாக மற்றொரு இளம் வீரர் உர்வில் படேல் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
34
யார் இந்த உர்வில் படேல்?
26 வயதான உர்வில் படேல் ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு வலுவான சாதனையை கொண்டு வந்துள்ளார். இவர் 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 170.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 1162 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கும். இயல்பாகவே ஆக்ரோஷமான தொடக்க வீரரான அவருக்கு நீண்ட வடிவங்களிலும் அனுபவம் உள்ளது, 10 முதல் தர ஆட்டங்களில் 423 ரன்களும், 22 லிஸ்ட் ஏ போட்டிகளில் 44 சராசரியாக 748 ரன்களும் எடுத்துள்ளார்.
மேலும் உர்வில் படேல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 28 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். 2018 இல் பரோடாவுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய உர்வில் படேல் பின்பு குஜராத்துக்கு மாறிய பிறகு, ரெட்-பால் கிரிக்கெட்டில் அதிக வாய்ப்புகளைக் கண்டார். முன்னதாக ஐபிஎல் 2023 இல் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட படேலுக்கு ஒருபோதும் ஒரு ஆட்டம் கூட கிடைக்கவில்லை.
ஆனால் இப்போது பெரிய மேடையில் தனது திறமையை வெளிப்படுத்த ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போது சிஎஸ்கேவில் தோனியை அடுத்து வேறு விக்கெட் கீப்பர் இல்லை. இதனால் தோனியின் இடத்தில் உர்வில் படேல் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.