சிஎஸ்கே அடுத்த சீசனில் தக்கவைக்க வாய்ப்புள்ள வீரர்கள்
sports-cricket May 05 2025
Author: Velmurugan s Image Credits:ANI
Tamil
சோபிக்க தவறிய சென்னை
ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னைக்கு இந்த சீசன் கைகொடுக்கவில்லை. விளையாடிய 11 போட்டிகளில் ஒன்பதில் தோல்வியடைந்தது.
Image credits: ANI
Tamil
மறக்க வேண்டிய சீசன்
தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணியும் சென்னைதான். அணியின் கேப்டன் பொறுப்பில் தோனி வந்தும் அணியை காப்பாற்ற முடியவில்லை.
Image credits: ANI
Tamil
சென்னையின் கம்பேக் தொலைவில் இல்லை
தோல்விகளின் விழுந்தாலும் சென்னையின் கம்பேக் என்பதற்கான அறிகுறியை கடைசி போட்டிகள் கொடுத்தன. அடுத்த சீசனில் சென்னை தக்க வைக்க வாய்ப்புள்ள சில வீரர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
Image credits: ANI
Tamil
ருதுராஜ் கெய்க்வாட்
காயம் காரணமாக சீசனை இழந்த வீரர் ருதுராஜ் கெய்க்வாட். சென்னையின் கேப்டனும் கூட. அணியின் சிறந்த பேட்ஸ்மேனும் இவர்தான்.
Image credits: ANI
Tamil
ஆயுஷ் பத்ராணி
ருதுராஜின் மாற்றாக அணியில் இணைந்த வீரர். சீசனில் சென்னைக்கு சிறந்த தொடக்கங்களை அளித்தார் இந்த 17 வயது வீரர். பெங்களூருவுக்கு எதிரான இன்னிங்ஸ் ஒரு உதாரணம்.
Image credits: ANI
Tamil
நூர் அஹ்மத்
16 விக்கெட்டுகளுடன் சீசனில் சென்னைக்காக சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர். பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வினுக்கு மேல் ஜொலிக்க முடிந்தது.
Image credits: ANI
Tamil
டேவால்ட் பிரெவிஸ்
சீசனின் பாதியில் சென்னையுடன் இணைந்த வீரர். பிரெவிஸ் மிடில் ஆர்டருக்கு வந்ததும் சென்னையின் பேட்டிங் வரிசை பலப்பட்டது.
Image credits: ANI
Tamil
கலீல் அஹ்மத்
சீசனில் சென்னையின் துருப்புச் சீட்டு. 14 விக்கெட்டுகளை இந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வீழ்த்தினார். பவர்பிளேயில் அவரது நிலையான ஆட்டம் எதிரணியை பலமுறை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.