விராட் கோலி சாதனையை தூள் தூளாக நொறுக்கிய திலக் வர்மா; சென்னையில் தரமான சம்பவம்!

First Published | Jan 26, 2025, 10:58 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விராட் கோலியின் சாதனையை திலக் வர்மா முறியடித்துள்ளார். இதேபோல் மற்றொரு புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். 

விராட் கோலி சாதனையை தூள் தூளாக நொறுக்கிய திலக் வர்மா; சென்னையில் தரமான சம்பவம்!

ஆட்ட நாயகன் திலக் வர்மா 

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கபப்ட்ட 20 ஓவரகளில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா சொதப்பிய போதிலும், திலக் வர்மா அதிரடியாக அரைசதம் அடித்து தனி ஆளாக இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 பந்தில் 72 ரன்கள் அடித்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். திலக் வர்மாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாரட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவர் நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார்.

Tilak Verma Batting

விராட் கோலியின் சாதனை தகர்ப்பு 

அதாவது தொடர்ச்சியாக நான்கு டி20 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கடைசி நான்கு இன்னிங்சில் திலக் வர்மா 318 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி தொடர்ச்சியாக நான்கு டி20 இன்னிங்ஸ்களில் 258 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திலக் வர்மா அந்த சாதனையை தகர்த்துள்ளார்.

இந்திய வீரர்கள் சஞ்சு சாம்சன் (257), ரோஹித் சர்மா (253), மற்றும் ஷிகர் தவான் (252) ஆகியோரும் தொடர்ச்சியாக நான்கு டி20 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். இது மட்டுமின்றி, தொடர்ச்சியாக நான்கு டி20 இன்னிங்ஸ்களில் அவுட் ஆகாமல் அதிக ரன்கள் எடுத்த சர்வதேச வீரர் என்ற சாதனையையும் திலக் வர்மா படைத்துள்ளார்.

'பனிமூட்டத்தின் வேலையா இருக்குமோ?' ஹாரி ப்ரூக் அவுட்டானதும் நேரலையில் கலாய்த்த முன்னாள் வீரர்கள்!


Tilak Verma Man Of The Match

முதல் சர்வதேச வீரர் 

அதாவது திலக் வர்மா கடைசியாக விளையாடிய 4 டி20 இன்னிங்ஸ்களில் 19, 120, 107 ரன்கள் மற்றும் நேற்று சென்னையில் 72 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்த 4 இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 271 ரன்கள் எடுத்து நாட் அவுட ஆக திகழ்கிறார். இதற்கு முன்பு இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர் (240), ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் (240) மற்றும் டேவிட் வார்னர் (239) 4 இன்னிங்ஸ்களில் நாட் அவுட் ஆக திகழ்ந்துள்ளனர். இந்த சாதனையும் திலக் வர்மா வசம் வந்து சேர்ந்துள்ளது.  
 

Tilak Verma Indian Team

கடின உழைப்புக்கு பலன் 

இதற்கிடையே இந்திய அணிக்கு வெற்றித் தேடி கொடுத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திலக் வர்மா, ''அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் என்னிடம் தெரிவித்தார். ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவில் பாஸ்ட் பவுலர்களின் பவுன்ஸ்களை நாங்கள் எதிர்கொண்டு இருந்ததால் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் ஆகியோரின் பந்துகளை சமாளிக்க ரெடியாக இருந்தோம். இதற்காக வலைப்பயிற்சியில் கடினமாக உழைத்து களத்தில் அதை செயல்படுத்தியதால் எங்களுக்கு பலன்கள் கிடைத்துள்ளது'' என்றார்.

தனி ஆளாக மாஸ் காட்டிய திலக் வர்மா; சிக்சர் மழை; 2வது டி20 போட்டியில் இந்தியா 'த்ரில்' வெற்றி!

Latest Videos

click me!