Mohammed Shami
முகமது ஷமிக்கு சோதனை
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அர்ஷ்தீப் சிங் என்ற ஒரே ஒரு பிரதான பாஸ்ட் பவுலருடன் தான் களமிறங்கியது.
காயத்தில் இருந்து குணமடைந்து ஓராண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த முகமது ஷமி பிளேயிங் வெலனில் இடம்பெறவில்லை. முகமது ஷமி விளையாடாததது குறித்து கேப்டன் சூர்யாகுமார் யாதவ்வும் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் ஷமிக்கு என்னதான் ஆயிற்று? பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்றால் பிறகு ஏன் அணியில் எடுக்கப்பட்டார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
Mohammed Shami Injuriy
பந்துவீசுவதில் சிரமம்
அதாவது நீண்ட தூரம் ஓடி வந்து பந்துவீசுவதில் சிரமம் ஏற்பட்டது. பயிற்சி முழுவதும் தொடர் சரியான பொஷிஷனில் இல்லாமல் சாய்வாக ஓடி வந்து வீசியுள்ளார். முகமது ஷமி 100% பிட்னஸ் எட்டவில்லை என்று அவர் முழங்காலில் மீண்டும் வீக்கம் உள்ளிட்ட பிரச்சனை ஏற்படுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தான் ஷமி முதல் டி20 போட்டியில் விளையாடவில்லை. மேலும் டி20 தொடர் முழுவதும் ஷமி விளையாடாமல் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயராகும் வகையில் இங்கிலாந்து ஓடிஐ தொடரில் களமிறங்குவார் என தகவல்கள் கூறுகின்றன.
இந்திய வீரர் யார் காயம் அடைந்தாலும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதியை நிரூபித்து விட்டு தான் அணிக்கு திரும்ப முடியும். ஆனால் ஷமி காயம் குணமடைவதற்குள் இந்திய அணிக்கு திரும்பியது எப்படி? எதன் அடிப்படையில் அவர் அணியில் எடுக்கப்பட்டார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Jasprit Bumrah
பிசிசிஐக்கு கோரிக்கை
ஏற்கெனவே இந்திய அணியின் முக்கியமான பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் அவதிப்படுவதால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. இப்போது ஓராண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஷமியும் முழு உடல்தகுதியை எட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில் இரண்டு இளம் பவுலர்களை பிசிசிஐ தயார் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய அணியின் ஜெர்சியில் 'பாகிஸ்தான்' பெயர் அச்சிடப்படாதா? மெளனம் கலைத்த பிசிசிஐ; என்ன சொன்னது?