குருவை மிஞ்சிய சிஷ்யன்; யுவராஜ் சிங் சாதனையில் இணைந்த அபிஷேக் சர்மா; என்ன தெரியுமா?

First Published | Jan 23, 2025, 10:12 AM IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் போட்டியில் யுவராஜ் சிங் சாதனையுடன் அபிகேஷ் ஷர்மா இணைந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

yuvraj singh and abhishek sharma

இந்தியா இங்கிலாந்து மேட்ச் 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அந்த அணியின் ஜோஸ் பட்லர் மட்டும் அரைசதம் (44 பந்துகளில் 68 ரன்கள்) அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களை தாண்டவில்லை. இந்திய அணி வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தியின் மாயஜால பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமால் இங்கிலாந்து வீரர்கள் எளிதில் விக்கெட்டை தாரை வார்த்தனர். வருண் ச்க்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Abhishek Sharma Batting

அபிஷேக் ஷார்மா சிக்சர் மழை 

எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன், அபிகேஷ் சர்மா அதிரடியாக தொடக்கம் தந்தனர். கிளாசிக் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளாக ஓட விட்ட சாம்சன் 20 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் இளம் கன்று பயமறியாது என்பதுபோல் ஆடிய அபிஷேக் ஷார்மா உலகின் அதிவேக பவுலர்களான மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துகளை நொறுக்கினார்.

அதுவும் மார்க் வுட் பந்துகளை சர்வசாதாரணமாக சிக்சர்களுக்கு பறக்க விட்டார். 20 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அபிஷேக் ஷார்மா வெறும் 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தம் அவர் 8 சிக்சர்களை விளாசி சிக்சர் மழை பொழிந்தார். 5 பவுண்டரிகளை ஓடவிட்டார். இந்த போட்டியில் இங்கிலந்து பவுலர்களை அலற விட்ட அபிகேஷ் சர்மா டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்திய அணியின் ஜெர்சியில் 'பாகிஸ்தான்' பெயர் அச்சிடப்படாதா? மெளனம் கலைத்த பிசிசிஐ; என்ன சொன்னது?


India vs Englad T20 Series

யுவராஜ் சிங்குடன் சாதனை பட்டியல் 

அதாவது இந்த போட்டியில் அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் அபிஷேக் சர்மாவின் குருநாதரும், முன்னாள் அதிரடி வீரருமான யுவராஜ் சிங் உள்ளார். யுவராஜ் சிங் 2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் வெறும் 12 பந்துகளில் அரைசதம் அடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

டி20 போட்டிகளில் இந்தியர்களின் அதிவேக அரைசதத்தில் இதுதான் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த போட்டியில் அவர் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட்டின் பவுலிங்கில் ஒரே ஓவரின் 6 பந்துகளையும் சிக்க்சர் விளாசியதை யாரும் மறுக்க முடியாது. 
 

Image Credit: Getty Images

குருவை மிஞ்சிய சிஷ்யன்

யுவராஜ் சிங்குக்கு அடுத்தபடியாக அபிஷேக் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக டி20யில் அதிவேக அரைசதம் அடித்த 2வது இந்தியர் என்ற பட்டியலில் இணைந்துள்ளார்.  யுவராஜ் சிங் அபிஷேக் சர்மாவின் பயிற்சியாளராக இருந்துள்ளார். ''யுவராஜ் சிங்கின் அதிரடியை பார்த்து தான் நான் அதிரடி வீரராக மாறினேன்'' என்று அபிஷேக் சர்மா அடிக்கடி கூறுவது வழக்கம். இந்நிலையில், அவர் தனது குருநாதரின் சாதனை பட்டியலில் இணைந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். 

டெஸ்ட் தோல்விக்கு பிறகு முதல் வெற்றி: வருண் சுழல், அபிஷேக்கின் அதிரடியால் இந்தியா வெற்றி!
 

Latest Videos

click me!