Asianet Tamil T20 Cricket, India vs England, Most Wickets in T20 Cricket
Arshdeep Singh Create New Record in T20 Cricket : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி. இதில் டாஸ் வென்று சூர்யகுமார் யாதவ் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியை 132 ரன்களுக்குள் சுருட்டினர். இந்திய அணியின் பந்துவீச்சுக்கு இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மண்டியிட்டனர். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வரலாறு படைத்தார். இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
Arshdeep Singh 97 Wickets
வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்துக்கு எதிராக தனது 61வது T20 சர்வதேச போட்டியில் விளையாட ஈடன் கார்டனில் களமிறங்கினார். அர்ஷ்தீப் சிங் இதுவரை 60 போட்டிகளில் மொத்தம் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதே நேரத்தில், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 80 போட்டிகளில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் முதல் விக்கெட்டாக பிலிப் சால்டின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக, யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை முறியடித்தார்.
Varun Chakravarthy, Arshdeep Singh, Hardik Pandya
இந்தியாவிற்காக T20ல் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் சாதனை:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் T20 போட்டி தொடங்கியது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதல் ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச வந்தார். ஓவரின் மூன்றாவது பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டை 0 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பிறகு மூன்றாவது ஓவரில் பென் டக்கெட்டை ஆட்டமிழக்கச் செய்து 2ஆவது விக்கெட்டைப் பெற்றார். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் T20 சர்வதேச கிரிக்கெட்டில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
T20 Cricket, Abhishek Sharma, Suryakumar Yadav
இந்தியாவிற்காக T20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்துவீச்சாளர்கள்:
இந்திய அணிக்காக T20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் அர்ஷ்தீப் சிங், அவர் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் யுஸ்வேந்திர சாஹல் உள்ளார், அவர் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் புவனேஷ்வர் குமார் 87 போட்டிகளில் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நான்காவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா 70 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா 110 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
IND vs ENG 1st T20 Cricket
இந்தப் போட்டியில் இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் 26 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் 0 ரன்னுல் ஆட்டமிழந்தார்.
India vs England T20 Cricket
இதையடுத்து அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளௌயாடி ரன்கள் குவிக்க இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் வெற்றியை பெற்றது. .அதோடு 1-0 என்று முன்னிலை பெற்றது. 2ஆவது டி20 போட்டி வரும் 25ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.