IND VS NZ Final: பிரையன் லாராவுடன் மோசமான சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

Published : Mar 09, 2025, 04:04 PM IST

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாராவுடன் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
IND VS NZ Final: பிரையன் லாராவுடன் மோசமான சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

IND vs NZ: Rohit Sharma equalled Brian Lara's worst record: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் கோப்பையை கைப்பற்ற இன்று தனது மோதலை தொடங்கி விடடன. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்ச்செல் சான்ட்னர் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பவுலிங் செய்கிறது.

24
சாம்பியன்ஸ் டிராபி பைனல்

இந்திய அணியை பொறுத்தவரை எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் களம் கண்ட அணியே இறுதிப்போட்டியிலும் களமிறங்கியுள்ளது. இந்திய அணி வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் என 4 ஸ்பின்னர்களுடனும், ஒரு பாஸ்ட் பவுலர் மற்றும் 1 மீடியம் பாஸ்ட் பவுலருடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி 82 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் டாஸை இழந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவதுசாம்பியன்ஸ் டிராபியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 5வது முறையாக டாஸ் வெல்ல தவறி விட்டார். மேலும் ஓடிஐயில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் டாஸை இழந்த ரோகித் சர்மா கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாராவுடன் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார். 

34
ரோகித் சர்மாவின் மோசமான சாதனை

பிரையன் லாராவின் டாஸ் தோல்விகளின் தொடர் அக்டோபர் 1998 இல் தொடங்கி மே 1999 இல் முடிந்தது. ரோஹித் சர்மாவின் டாஸ் தோல்விகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் தொடங்கியது, பின்னர் இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஐந்து டாஸ்களிலும் தோல்வியடைந்தது. இதுமட்டுமின்றி இந்தியா தொடர்ச்சியாக 15 டாஸ்களை இழந்துள்ளது. ரோகித் சர்மா 12 முறையும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் தொடக்கத்தில் கே.எல். ராகுல் தலைமையில் மூன்று போட்டிகளிலும் இந்தியா டாஸ் இழந்து இருந்தது.

IND VS NZ: சாம்பியன்ஸ் டிராபி பைனல்: இந்தியா முதலில் பவுலிங்! நியூசிலாந்து முக்கிய வீரர் விலகல்!
 

44
டாஸ் இழந்தாலும் கவலையில்லை

இன்றைய போட்டியில் டாஸை இழந்தபிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ''நாங்கள் முதலில் பந்து வீச தான் தீர்மானித்து இருந்தோம். இரண்டாவது பேட்டிங் செய்வதில் உண்மையில் கவலையில்லை. நாங்கள் பலமுறை இலக்கை வெற்றிகரமாக துரத்தியுள்ளோம். இறுதியில், நீங்கள் எவ்வளவு சிறப்பாக விளையாட விரும்புகிறீர்கள் என்பதுதான் முக்கியம். டாஸைப் பற்றி கவலைப்படாமல், நன்றாக விளையாட வேண்டும் என்று நாங்கள் முன்கூட்டியே டிரஸ்ஸிங் ரூமில் பேசியிருந்தோம்'' என்றார்.

இந்தியா vs நியூசிலாந்து: ஐசிசி போட்டிகளில் அதிக வெற்றியை சுவைத்தது யார்?

Read more Photos on
click me!

Recommended Stories